பிரேம்ஜியை நம்பினேன் ஏமாத்திட்டார்.. இப்படி பண்ணுவான்னு நினைக்கவே இல்லை.. பாடகி ஓபன் டாக்
சென்னை: பிரேம்ஜி அமரன் சில வாரங்களுக்கு முன்பு இந்து என்பவரை திருமணம் செய்துகொண்டார். வெங்கட் பிரபு முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்து சேலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இருவருக்கும் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட பழக்கம் பின்நாட்களில் காதலாக மாறியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரண்டு பேருக்கும் கிட்டத்தட்ட 20 வயதுவரை வித்தியாசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் பிரேம்ஜி அமரன் குறித்து பாடகி வினைதா ஒரு விஷயம் பேசியிருக்கிறார்.
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என்று பன்முக திறமை கொண்டவர் பிரேம்ஜி அமரன். இவரது அண்ணன் வெங்கட் பிரபு ஃபேமஸான இயக்குநர். அண்ணன் இயக்கும் படங்களில் தவறாமல் நடித்துவரும் பிரேம்ஜி சில படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். இதற்கிடையே லண்டனில் படித்த அவர், யுவன் ஷங்கர் ராஜாவிடமும் பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார். கலகலப்பான குணம் கொண்ட பிரேம்ஜி அமரன் திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்துவந்தார்.

மாட்டிக்கினாரு ஒருத்தரு: அவரிடம் திருமணம் குறித்து கேட்டாலே ஏதோ பதில் சொல்லி நைஸாக நழுவிவிடுவார். சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு இந்து என்ற பெண்ணை திருத்தணி முருகன் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அந்தத் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். வெங்கட் பிரபு முன் நின்று திருமணத்தை நடத்திவைத்தார். திரைத்துறையிலிருந்து வைபவ் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
சோஷியல் மீடியா காதல்: இந்து சேலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அவர் தனியார் வங்கி ஒன்றில் உயர் பதவியில் இருப்பதாக கூறப்படுகிறது. இருவருக்கும் முதலில் முகநூலில் ஆரம்பித்த பழக்கம்; பிறகு வாட்ஸ் அப்பில் நீண்டிருக்கிறது. அந்த வாட்ஸ் அப் உரையாடலில்தான் இருவருக்குமான காதல் மலர்ந்ததாகவும்; முதலில் இந்துதான் பிரேம்ஜியிடம் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும் பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இருவருக்கும் 20 வயதுவரை வித்தியாசம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ரகளை இந்து: இந்துவும் பிரேம்ஜிக்கு தகுந்த ஆளாகத்தான் இருக்கிறார். திருமணம் ஆன கையோடு பிரேம்ஜி அமரன் சமையலறையில் சமையல் செய்யும் வீடியோவை பகிர்ந்த அவர்; தொடர்ந்து தங்களது திருமணம், ரிலேஷன்ஷிப் குறித்து கலகல வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுவருகிறார். அவரை அனைத்தும் சமூக வலைதளங்களில் வேகமாக ட்ரெண்டாகிவருகின்றனர். கடைசியாகக்கூட, பிரேம்ஜி வாலிபராக இருக்கும்போது தான் குட்டி பாப்பாவாக இருந்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
வினைதா பேட்டி: இந்நிலையில் பாடகி வினைதா பிரேம்ஜி அமரனின் திருமணம் குறித்து பேசுகையில், " பிரேம்ஜியும் நானும் சிங்கிளாகத்தான் இருந்தோம். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். பிரேம்ஜியையும், ஜெய்யையும்தான் நான் நம்பியிருந்தேன். எங்கள் கேங்கில் ஒரு பெண்ணாக நான் மட்டும்தான் சிங்கிள். வீட்டுக்கு போய் கோலம் எல்லாமா போடப்போற என்று பிரேம்ஜி என்னை கலாய்த்துக்கொண்டிருப்பார். ஆனால் அப்படி சொன்னவரே இப்போ திருமணம் பண்ணியிருக்கிறார்.
ஐடியா கொடுத்தேன்: ஜெய் திருமணம் செய்துகொள்வான்; பிரேம்ஜி எல்லாம் வாய்ப்பே இல்லை என்றுதான் நினைத்தேன். பிரேம்ஜியின் காதலுக்கு நான் தான் ஐடியாவே கொடுத்தேன். இந்து பிரபோஸ் பண்ணும்போது பிரேம்ஜியிடம், இப்படி பண்ணு, அப்படி பண்ணு என்று கூறினேன். என்னிடம் ஐடியாவையும், ஆசீர்வாதத்தையும் வாங்கினான். சரி சும்மாதான் இருக்கும் என்று நினைத்தேன். இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்துடுவான்னு நினைக்கவே இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











