இனியும் முடியாது.. ரொம்ப வலிக்குது.. கள்ளத்தொடர்பு குறித்து புகார் கூறிய மனைவி.. பாடகர் பதில்!

சென்னை: தன் மீது தனது மனைவி கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என பிரபல பாடகரான யோ யோ ஹனி சிங் மறுத்துள்ளார்.

சிங்கர் மற்றும் ராப்பர் ஆன ஹ்ரிதேஷ் சிங் ரசிகர்கள் மத்தியில் யோ யோ ஹனி சிங் என பிரபலமானவர். மேலும் லுங்கி டான்ஸ் என்ற பிரபல பாடலை பாடி பிரபலம் ஆனவர் யோ யோ ஹனி சிங்.

இவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஷாலினி என்பவரை திருமணம் செய்தார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களின் குடும்பத்தில் புயல் வீச தொடங்கியுள்ளது. அவரது மனைவி டெல்லி நீதிமன்றத்தில் யோ யோ ஹனி சிங்கிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி கடந்த வாரம் 120 பக்க மனுவை தாக்கல் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு கொடுமை

திருமணத்திற்கு பிறகு கொடுமை

அந்த மனுவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, அந்த மனுவில் 2011 இல் தேனிலவுக்காக, மொரீஷியஸ் சென்ற போது, ​​அவரின் அணுகுமுறை திடீரென மாறியதாகவும், தனது கணவர் ஹனி சிங் தம்மை உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக துன்புறுத்தியதாகவும், 2011-ல் திருமணத்திற்குப் பிறகு மிகவும் கொடுமைப்படுத்தி, கடுமையாக நடத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

முடியை இழுத்து அறைந்து

முடியை இழுத்து அறைந்து

மேலும் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு, விருப்பமின்றி தன்னை திருமணம் செய்து கொண்டதாக ஹனி சிங் கூறியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் மொரீஷியஸ் பயணத்தில் அடிக்கடி குடிபோதையில் இருந்து தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னை பலமுறை தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டதாகவும், ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, ​​ தன்னுடைய முடியை இழுத்து, அறைந்து, 'வாயை மூடு' என்று சொன்னதாகவும் கூறியிருந்தார்.

பல பெண்களுடன் அடிக்கடி உடலுறவு

பல பெண்களுடன் அடிக்கடி உடலுறவு

மேலும் ஹனி சிங் தனது சுற்றுப்பயணங்களில் தன்னை அழைத்துச் செல்ல மறுத்து, 'பல பெண்களுடன் அடிக்கடி உடலுறவு கொள்ளத் தொடங்கினார்' என்றும் தான் திருமணமானவர் என்பதை உலகிற்கு வெளிப்படுத்தாத அவர், வைரங்கள் தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறி தனது திருமண மோதிரத்தை கூட அணிய மறுத்தார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இரக்கமின்றி அடித்தார்

இரக்கமின்றி அடித்தார்

திருமணத்தின் படங்கள் ஆன்லைனில் கசிந்த போது, ​​தன்னை அவர் 'இரக்கமின்றி அடித்ததாகவும்', தான்தான் திருமண புகைப்படத்தை ஆன்லைனில் அப்லோட் செய்தேன் என்று சந்தேகப்பட்டு துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு திருமணம் ஆனதை மூடிமறைக்க, அந்தப் படங்களை மார்பிங் செய்து புகைப்படங்கள் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததைப் போல தோற்றமளிக்க வைத்தார் என்றும் ஷாலினி தெரிவித்திருந்தார்.

பெண்ணுடன் தொடர்பு

பெண்ணுடன் தொடர்பு

மேலும், பிரவுன் ரங் மியூசிக் வீடியோவில் அவருடன் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் அந்த பெண்ணுடன் ஹனி சிங் துபாயில் உல்லாசமாக இருந்தாகவும் குற்றம் குற்றம்சாட்டினார் ஷாலினி. மேலும் "துபாயில் இருந்து அவர் திரும்பியவுடன், ஒரு பெண்ணுடன் இருந்த அந்தரங்க புகைப்படங்களை தான் பார்த்ததாகவும் அதுகுறித்து கேட்ட போது தன் மீது மது பாட்டில்களை வீசியதாகவும் கூறினார் ஷாலினி.

ரூ. 10 கோடி இழப்பு

ரூ. 10 கோடி இழப்பு

அதன் பிறகு மேலும் பல பெண்களுடன் தனது கணவர் இருக்கும் ஆபாச படங்களைக் கண்டுபிடித்ததாகவும் ஷாலினி கூறியிருந்தார். தனது மாமனார் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார் ஷாலினி. தன்னை ஒரு 'பண்ணை விலங்கு போல் கொடுமை படுத்தியதாகவுத் கூறிய ஷாலினி, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 10 கோடி இழப்பீடு கேட்டிருந்தார் ஷாலினி. இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மனைவியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

மனைவியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து யோ யோ ஹனி சிங், இன்ஸ்டா பக்கத்தில் ஒருபக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, எனது பாடல் வரிகள், என் உடல்நலம் பற்றிய ஊகங்கள், மற்றும் பொதுவாக எதிர்மறை ஊடக கவரேஜ் ஆகியவற்றிற்காக கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானாலும் கடந்த காலங்களில் நான் ஒரு பொது அறிக்கையையோ அல்லது பத்திரிகை குறிப்பையோ வெளியிடவில்லை.

"நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்

இருப்பினும், இந்த முறை அமைதியை கடைப்பிடிக்க எனக்கு எந்த தகுதியும் இல்லை, ஏனென்றால் சில குற்றச்சாட்டுகள் என் குடும்பத்தின் மீதும் என் வயதான பெற்றோர் மற்றும் தங்கை மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் இழிந்தவை மற்றும் அவதூறானவை. இந்த நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, உண்மை விரைவில் வெளிவரும் என்று நான் நம்புகிறேன். "நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன், நேர்மையும் வெல்லும்." என கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 28 வரை அவகாசம்

ஆகஸ்ட் 28 வரை அவகாசம்

யோ யோ ஹனி சிங்கின் மனைவி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் தனியா சிங்கிடம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அவர் ஹனி சிங்கிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் பதில் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 28 வரை ஹனி சிங்கிற்கு அவகாசம் அளித்துள்ளார்.

நான் மிகவும் வேதனைப்படுகிறேன்

நான் மிகவும் வேதனைப்படுகிறேன்

மேலும் தனது குடும்பத்திற்கு எதிராக தன்னுடைய மனைவி ஷாலினி தல்வார் சுமத்திய பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளால் நான் மிகவும் வேதனைப்படுகிறேன். அவருடைய இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் கடுமையாக வெறுக்கத்தக்கவை என்றும் பாடகர் யோ யோ ஹனி சிங் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X