பாடகியும் முகமது சிராஜும்.. அண்ணி-னு நெனச்சோம்.. அக்காவா? யாருடா ரக்‌ஷா பந்தனை கண்டுபிடுச்சது?

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்திகள் காரணமாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் பேசு பொருளாகியுள்ளார். சமீபத்தில், பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தியும் பாடகியுமான ஜனாய் போஸ்லேவுடன் அவர் காதலில் இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால், நேற்று அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி ரக்‌ஷா பந்தனில் நடைபெற்ற ஒரு சம்பவம் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஜனாய் போஸ்லேவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முகமது சிராஜ் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவின. இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், அவர்கள் இருவரும் காதலிப்பதாக ஊகங்களை கிளப்பின. இருப்பினும், முகமது சிராஜ் மற்றும் ஜனாய் போஸ்லே இருவரும் தங்களை அண்ணா-தங்கை என இன்ஸ்டாகிராமில் அறிவித்ததன் மூலம் இந்த ஊகங்களுக்கு, ஊர் உலகம் கண், காது, மூக்கு வைத்து பேசுவதற்கு முன்னரே முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Singer Zanai Bhosle And Cricketer Mohammed Siraj Put Full Stop To Relationship Rumours
Photo Credit:

நேற்று அதாவது ஆகஸ்ட் 9, அன்று ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனாய் போஸ்லே முகமது சிராஜின் கையில் ராக்கி கட்டினார். இந்த நிகழ்வை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட ஜனாய், "இதைவிட சிறந்த சகோதரனை நான் எதிர்பார்க்கவில்லை" என்று பதிவிட்டார். இந்த பதிவு வெளியானதும், சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இவர்களின் இந்த பதிவு பலருக்கும் ஷாக் கொடுத்தது.

அண்ணி இல்லையா?: இவர்களின் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர் ஒருவர், "அனைவரையும் அமைதியாக்கிவிட்டீர்கள்!" என்று பதிவிட, மற்றொருவர் "கிசுகிசுக்களுக்கு ஒரு முடிவு" என்று கமெண்ட் போட்டுள்ளார். இவர்கள் அனைவரது கமெண்ட்டுகளை விடவும் ஒரு ரசிகரின் கமெண்ட் தான் ஹைலைட். அதாவது, "நாங்கள் அண்ணி என்று நினைத்தோம்... ஆனால் அக்கா ஆக்கிட்டீங்களே!" என்று ஒரு போகிற போக்கில் செம்மையாக கலாய்த்த விட்டார்கள் எனக் கூறும் அளவுக்கு இருந்தது.

Singer Zanai Bhosle And Cricketer Mohammed Siraj Put Full Stop To Relationship Rumours
Photo Credit:

காதல் கிசுகிசு: சிராஜ் ஒரு காதல் சர்ச்சையில் சிக்கியது இது முதல் முறையல்ல. முன்னதாக, இந்தி பிக் பாஸ் 13 போட்டியாளர் மஹிரா ஷர்மாவுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவின. மஹிரா ஊடகங்கள் முன்னால் வந்தாலும் சரி, ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும் சரி, முகமது சிராஜ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சிராஜ் ஆவேசம்: இந்த வதந்திகளால் ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த சிராஜ், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "தயவுசெய்து இத்தகைய கேள்விகளை கேட்பதை நிறுத்துங்கள். இவை அனைத்தும் முற்றிலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை" என்று விளக்கமளித்தார். மஹிரா ஷர்மாவும் ஒரு நேர்காணலில், "நான் யாரையும் காதலிக்கவில்லை" என்று தெளிவுபடுத்தினார்.

முடிவு: இந்த வீடியோவுக்கு பின்னர், முகமது சிராஜ் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல, அவர் 'சகோதரன்' மோடில் உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த ராக்கி வீடியோ வுக்குப் பிறகு, அவர் மீதான அனைத்து வதந்திகளும் முடிவுக்கு வந்துவிட்டது. கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. இதில் முகமது சிராஜ் 5 போட்டிகளிலும் ஓய்வு இல்லாமல் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X