பாட்டும் பாட்டுக்கு பின்னும்... மடை திறந்து இசை நிகழ்ச்சியில் இந்த வாரம் ஶ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ்

By

சென்னை: பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் பங்கேற்கும், மடை திறந்து - 3 இசை நிகழ்ச்சி சனிக்கிழமை சென்னையில் நடக்கிறது.

மடை திறந்து என்பது நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் (NOISE AND GRAINS) நிறுவனத்தால் நடத்தப்படும் 12 இசை நிகழ்ச்சிகளைக் கொண்ட தொடர்.

ரசிகர்களுக்குப் பிடித்த பாடல்களுக்குப் பின்னால் இருக்கும் சுவையான, சுவராஸ்யமான சம்பவங்களை, பிடித்த பாடகர்களே பகிர்ந்துக் கொள்வார்கள்.

நெஞ்சே எழு

நெஞ்சே எழு

இந்நிறுவனம் ஏ.ஆர். ரஹ்மானின், நெஞ்சே எழு, இளையராஜாவின் இளையராஜா 75, அனிருத்தின் சிங்கப்பூர் லைவ், எஸ் பி பாலசுப்பிரமணியம் - யேசுதாசின் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.

ஆண்ட்ரியா, சின்மயி

ஆண்ட்ரியா, சின்மயி


இப்போது, மடை திறந்து என்ற இசை நிகழ்ச்சி தொடரை சென்னையில் நடத்தி வருகிறது.
இந்த தொடரின் முதல் அத்தியாயத்தில் ஆண்ட்ரியா மற்றும் சின்மயி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

விஜய் பிரகாஷ்

விஜய் பிரகாஷ்

இரண்டாவது அத்தியாயத்தில் பாடகர் ஹரிஹரன் பங்கேற்றார். மூன்றாவது அத்தியாயத்தில் முக்கிய பாடகர்களான சீனிவாஸ் மற்றும் விஜய் பிரகாஷ் பங்கேற்கின்றனர்.

சனிக்கிழமை

சனிக்கிழமை

இவர்களுடன் இணைந்து, இளம் பாடகர்களான சரண்யா சீனிவாஸ் மற்றும் ஹரிப்ரியா இடம் பெறுகின்றனர். இந்நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை சென்னை கோர்ட்யார்ட், பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நடக்கிறது.

சித் ஸ்ரீராமுடன்

சித் ஸ்ரீராமுடன்

இதையடுத்து பிப்ரவரி மாதம் பாடகர் சித் ஸ்ரீராமுடன் தென்னிந்திய இசை சுற்றுப் பயணத்தையும் இந்நிறுவனம் நடத்த இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X