பிக்பாஸ் வீட்டுக்குள் இந்த முறை 2 பாடகர்கள்.. ஒன்னு வேல்முருகன்.. இன்னொன்னு?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை இரண்டு பாடகர்கள் பங்கேற்றுள்ளனர். முதலில் பாடகர் வேல்முருகன் சென்ற நிலையில் கடைசி ஆளாக பாடகர் ஆஜித் உள்ளே நுழைந்தார்.

வேல்முருகன் ஒரு பின்னணி பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தனது நாட்டுப்புற பாடல்கள் மூலம் பிரபலமானவர்.

தொடர்ந்து நாட்டுப்புற பாடல்களை பாடி வந்த வேல்முருகன் சுப்மணியபுரம் படத்தில் இடம் பெற்ற மதுர குலுங்க குலுங்க என்ற பாடலின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் வேல்முருகன்.

Singers Vel murugan and Aajeedh enters in Biggboss house

தொடர்ந்து நாடோடிகள் படத்தில் இடம்பெற்ற ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா மற்றும் ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற ஒத்த சொல்லால ஆகிய பாடல்கள் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

நாட்டுப்புற இசையில் அவரது பங்களிப்புக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார் வேல்முருகன். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் வேல்முருகன்.

அவரை தொடர்ந்து, இளம் பாடகரான ஆஜித்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஆஜித் பாடகராக மட்டுமின்றி யூ டியூபராகவும் உள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Bigg Boss 4 Tamil இடுப்பழகி முதல் கருப்பு ரோஜா வரை வந்தாச்சு | Kamal Hassan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X