»   »  2 குழந்தைகளுக்கு அப்பா, அம்மாவாக நடிக்கும் சூர்யாவும், அனுஷ்காவும்!

2 குழந்தைகளுக்கு அப்பா, அம்மாவாக நடிக்கும் சூர்யாவும், அனுஷ்காவும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாசு படத்தில் சொதப்பிய சூர்யா அடுத்து, சிங்கம் 3 யில் இழந்ததை மீட்டு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

அஞ்சான் மற்றும் மாசு இரண்டு படங்களும் கவிழ்த்ததில் சூர்யாவின் மார்க்கெட் சற்றே சரிந்துள்ளது, இந்த சரிவை சரிசெய்யும் நோக்கத்துடன் அடுத்து ஹரியுடன் கைகோர்க்கிறார் சூர்யா.

Singham 3 Update News

சிங்கம் மற்றும் சிங்கம் 2 வில் நாயகியாக நடித்த அனுஷ்கா சிங்கம் 3 படத்திலும் சூர்யாவின் ஜோடியாக நடிக்கிறார்.

முதலில் படத்தில் அனுஷ்கா இல்லை என்று கூறியவர்கள் தற்போது படத்தில் சூர்யாவின் மனைவியாக அனுஷ்காவை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.

சூர்யா - அனுஷ்கா இருவரும் 2 குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாக இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சிங்கம் 2 வில் ஹன்சிகாவை ஏற்கனவே கொன்று விட்டதால் இந்தப் படத்தில் வேறு ஒரு முன்னணி நடிகையை, இரண்டாவது நாயகியாக நடிக்க வைப்பதற்கு பேச்சு வார்த்தையில் இறங்கி இருக்கின்றனராம் படக்குழுவினர்.

English summary
Singham 3 Surya & Anushka will be seen as wife and husband. Anushka will be seen as a mother of 2 kid's in Suriya’s Singham 3.
Please Wait while comments are loading...