ரிலீஸான ஐந்தே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்த 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்'

By Siva

டெல்லி: அஜய் தேவ்கன், கரீனா கபூர் நடித்த சிங்கம் ரிட்டர்ன்ஸ் படம் ரிலீஸான 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

மசாலாவை அரை அரை என்று அரைத்து அதை படமாக கொடுத்து ஜஸ்ட் லைக் தட்டாக ரூ.100 கோடி வசூல் செய்வதற்கு பெயர் போனவர் இந்தி இயக்குனர் ரோஹித் ஷெட்டி. அப்படிப்பட்ட மசாலா மன்னன் நம்ம சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தை இந்தியில் அஜய் தேவ்கனை வைத்து ரீமேக் செய்து ரூ. 100 கோடியை அள்ளினார்.

சிங்கம் பிச்சுக்கிட்டு ஓடியதை பார்த்த அவர் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்று பெயர் வைத்து அதை ஒரு சுபயோக சுபதினத்தில் வெளியிட்டார்.

முதல்நாள்

முதல்நாள்

கடந்த 14ம் தேதி ரிலீஸான சிங்கம் ரிட்டர்ன்ஸ் இரண்டே நாளில் ரூ.50 கோடியை ஈசியாக வசூலித்துவிட்டது. ரூ.50 கோடியை தொட்டால் அடுத்து ரூ.100 கோடி தானே.

ரூ.100 கோடி

ரூ.100 கோடி

சிங்கம் ரிட்டர்ன்ஸ் படம் ரிலீஸான 5 நாட்களில் ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ரோஹித் ஷெட்டியின் மசாலாவின் மவுசு கொஞ்சம் கூட குறையவில்லை என்பது தெரிகிறது.

சிங்கம் 2

சிங்கம் 2

சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் ரீமேக் அல்ல சிங்கம் ரிட்டர்ன்ஸ். இது இந்தி சிங்கம் படத்தின் அடுத்த பாகம். படத்தில் ரோஹித் ஷெட்டியின் அக்மார்க் ஆக்ஷன் காட்சிகள், நெத்தியில் அடிப்பது போன்ற பஞ்ச் வசனங்கள் குறைவில்லாமல் உள்ளது.

விமர்சனம்

விமர்சனம்

ரோஹித் ஷெட்டியின் படங்களை விமர்சனங்கள் சற்றும் பாதிப்பது இல்லை. அவர் எடுத்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை விமர்சகர்கள் திட்டித் தீர்த்தார்கள், ரசிகர்களோ கொண்டாடித் தீர்த்தார்கள். தற்போது சிங்கம் ரிட்டர்ன்ஸுக்கும் அதே நிலைமை தான்.

சரி இல்லையே

சரி இல்லையே

சிங்கம் படத்துடன் ஒப்பிடுகையில் சிங்கம் ரிட்டர்ன்ஸ் கெத்தாக இல்லை, ஏமாற்றம் அளிக்கிறது என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். நீங்கள் பாட்டுக்கு விமர்சியுங்கள் நாங்கள் பாட்டுக்கு தியேட்டருக்கு சென்று படத்தை திரும்பத் திரும்ப பார்த்து படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்குகிறோம் என்று உள்ளனர் ரசிகர்கள்.

கரீனா

கரீனா

சிங்கம் படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். சிங்கம் ரிட்டர்ன்ஸில் கரீனா தான் நாயகி. படம் முழுக்க சிங்கம் அஜய் தேவ்கன் தான் கர்ஜிக்கிறார். கரீனாவுக்கு பெரிதாக ஒரு வேலையும் இல்லை. அவருக்கு கொடுத்த வேலையை அவர் ஒழுங்காக செய்துள்ளார்.

ரோஹித்

ரோஹித்

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டியுள்ள 5வது படம் சிங்கம் ரிட்டர்ன்ஸ். ரோஹித்தின் வசூல் வேட்டை தொடர்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X