சிங்கிள் சூப்பர் ஸ்டார்.. பென் கியூமன்.. வெற்றிப் படிக்கட்டுகள் !

சென்னை : லண்டனில் நான் பார்த்த முதல் வேலை பாத்திரம் கழுவுவதுதான் என்று பாடகர் பென் கியூமன் , ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்த தகவல்களை பகிர்ந்து இருக்கிறார் .

சுதந்திர பாடகர்கள் தற்சமய இணைய வளர்ச்சியில் பெரிய அளவில் வளர்ந்து வருகின்றனர். பாப் இசை பாடகராகவும் சுதந்திர இசையமைப்பாளராகவும் உருவாகியுள்ள நாகர்கோவிலை சேர்ந்த பென் கியூமன் சிங்கிள் சூப்பர் ஸ்டார் பாப் இசை ஆல்பம் மூலம் தற்போது பிரபலடைந்து உள்ளார்.

Single super star ben human success

மைக்கல் ஜாக்சன் தான் எனக்கு பாப் இசையை கற்று தந்தவர் என்று பென்கியூமன் கூறினார். சிறு வயதில் இருந்தே பென்கியூமன் மைக்கல் ஜாக்சன் பாடல்களை கேட்டு தான் வளர்ந்தேன் நான் ஆங்கிலம் சரியான முறையில் கற்று கொள்வதற்கு முன்பே மைக்கல் ஜாக்சன் பாடல்களின் வரிகளை மனப்பாடமாய் பாடுவேன் அந்த அளவுக்கு மைக்கல் ஜாக்சன் பிடிக்கும் என்றும் கூறினார் .

மேலும் நான் இங்கு நாகர்கோவிலில் படிக்கும் போது காட்சி தொடர்பியல் படிக்க ஆசைப்பட்டேன் ஆனால் பெற்றோர் பொறியியல் படிக்க விரும்பினார்கள். பின்பு லண்டன் சென்று சவுண்ட் இஞ்சினியரிங் படித்தேன். அப்போது தான் சுதந்திர இசையமைப்பாளர் மற்றும் பாப் பாடகர் டீஜேவுடன் பணியாற்றினேன் அவர் தற்போது அசுரன் படத்தில் நடித்திருப்பது ஒரு நல்ல எடுத்துகாட்டு எங்களுக்கு நல்ல வழி காட்டி சென்று இருக்கிறார் என்று கூறினார் .

Single super star ben human success

அதன்பின் நல்ல அணி மற்றும் நண்பர்கள் எனக்கு லண்டனில் கிடைத்தார்கள் அதனால் தான் என்னால் இதனை சாதிக்க முடிந்தது என்று கூறினார். நான் யாரிடமும் போய் இவ்வளவு செலவு செய்யுங்கள் என்று கூற முடியாது அதனால் நானே பல சினிமா தொழில்நுட்பங்களை கற்று கொண்டு என் நண்பர்களுடன் பணியாற்றி சிறந்த இசையை தர முடிகிறது என்று கூறினார்.

Single super star ben human success

நான் லண்டன் சென்ற பிறகு எப்படி வாழ்வை ஓட்டுவது என்று தெரியவில்லை வாடகை தரவேண்டும் என்பதால் பாத்திரம் கழுவினேன். லண்டனில் மனிதர்களை நன்கு நடத்துவார்கள் அதற்கு பிறகு நான் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றினேன் இப்படி பல வேலைகள் செய்து நிறைய கற்று கொண்டு தான் தற்போது இந்த நிலைமையில் இருக்கிறேன் என்று கூறினார் .

கடைசியாக கூறும்போது நான் சூப்பர் ஸ்டாரின் மிக பெரிய ரசிகன் அவர் வீட்டுக்கு அவரை பார்க்க அடிக்கடி செல்வேன் ஆனால் ஒரு முறை கூட பார்க்க வாய்ப்பு கிடைத்தது இல்லை அதன்பின் ஒரு நாள் அழைப்பு வந்தது. அதே நாளில் எனது ஆல்பம் சன் மியூசிக்கில் வெளியானது நான் எனது பாடல் ஆல்பத்தை அவரிடம் கொடுத்து சார் நீங்க இத பார்த்தால் மட்டும் போதும் என்றேன் அவர் தட்டிகொடுத்த பெரிய ஆளா வருவ என்று கூறினார் என்பதை மிக மகிழ்ச்சியுடன் கூறினார். தற்போது நானும் டீஜேவும் ஒரு பாடலில் இணைந்து பணியாற்ற பேசி வருகிறோம் கூடிய விரைவில் பார்போம் என்றும் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X