உங்களுக்கு எப்படி நயன் செட்டானார்?: விக்கி வெளியிட்ட புகைப்படத்தால் சிங்கிள்ஸ் கடுப்பு
Recommended Video

சென்னை: விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்த சிங்கிள்ஸ் எல்லாம் வயித்தெரிச்சலில் உள்ளனர்.
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது அனைவருக்கும் தெரியும். இருவரும் காதலை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சமூக வலைதளத்தில் விக்னேஷ் சிவன் வெளியிடும் கருத்துகள் காதலை உறுதி செய்துள்ளது.

இந்த ஆண்டே நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரம் கிடைக்கும்போது எல்லாம் இருவரும் வெளிநாட்டிற்கு சென்று அங்கு புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுகிறார்கள்.
நயனுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சிங்கிள்ஸ்களின் சாபத்தை பெற்று வருகிறார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் தானும், நயன்தாராவும் கை கோர்த்து, மூக்கோடு மூக்கு உரசிக் கொண்டபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
அந்த புகைப்படத்தை பார்த்த சிங்கிள்ஸ் பலர் இந்த ஆளுக்கு இதே வேலையாப் போச்சு சும்மா சும்மா கடுப்பேற்றுகிறார் என்று தெரிவித்துள்ளனர். சிலரோ உங்களுக்கு எப்படிப்பா நயன் செட்டானார் என்று கேட்டுள்ளனர்.
மேலும் சிலரோ இந்த ஆண்டு திருமணம் செய்வீர்கள் அல்லவா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











