நாளு நாளு பொங்கல் திருநாளு…ட்ராண்டாகும் ‘சிங்கப்பூர் பொங்கல்‘ பாடல்

சென்னை : தமிழர் திருநாளான பொங்கலுக்கு, சிங்கப்பூர் பொங்கல் என்ற ஆல்பம் வெளியாகி உள்ளது. இந்த பாடலை செந்தில் ராஜலட்சுமி தம்பதியினர் பாடி உள்ளனர். வெளியாகிய சில மணி நேரங்களிலேயே இந்த பாடல் ட்ராண்டாகி உள்ளது.

தமிழர் திருநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயர்களுக்கும் நன்றி சொல்லி கொண்டாடும் விழாவாகும். இந்த சிறப்பு வாய்ந்த இந்த நாளில் தமிழக்கும், தமிழர்களுக்கும் உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு அங்கீகாரமான ஆட்சி மொழியை முதன்முதலில் தந்துள்ளது சிங்கப்பூர். இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை. சிங்கப்பூர் பொங்கல், தமிழர் திருநாள் பாடல்.

Singpore pongal album song

தமிழர் திருநாள் பாடல் சிங்கப்பூரில் உருவாக முக்கிய காரணமாக அமைந்தது தமிழக்கு கிடைத்த அங்கீகாரம்தான். டுலெட் பட நாயகன் நடித்து இயக்கியிருக்கும் பாடல் தான் 'நாளு நாளு தமிழர் திருநாளு' பாடல் வெளியான ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்களை கேட்க ரசிக்க வைத்துள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் பாடலும் இதுதான்.

Singpore pongal album song

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் வெற்றியாளர்கள் செந்தில்கணேஷ் & ராஜலட்சுமி அவர்களின் முதல் சர்வதேச பாடலாகும். சாதி, மதம், நாடு கடந்து கொண்டாடும் தமிழர் பண்டிகை திருநாள் தைப்பொங்கல். தமிழர்கள் ஒற்றுமையை போற்றும் நாள் இந்த தமிழர் திருநாள். மிக பிரமாண்டமாக சிங்கப்பூர், மலேசியா, மதுரையில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

Singpore pongal album song

சிங்காவுட் ப்ரோடைக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் திரு. லோகன், திருமதி. சரஸ், திரு. சந்தோஷ் நம்பிராஜன் இணைந்து தயா‌ரித்திருக்கும் பாடல், குட்டே ஃபூட்டி பார்லர் முதன்மை ஆதரவாளர், காயத்ரி உணவகம் இணை ஆதரவாளர். இதன் முன்னோட்டமே ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்து பெரும் வெற்றி பெற்றது.

Singpore pongal album song

இந்த 2020 பொங்கலில் இந்த தமிழர் திருநாள் பாடல் நிச்சயம் கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் என்று நம்பப்படுகிறது. பாடலை எழுதியவர் கவிஞர் வடிவரசு, இசையமைப்பாளர் ஷர்வன் கலை. இயக்கம் சந்தோஷ் நம்பிராஜன்.

Singpore pongal album song

ஹாலிவுட், பாலிவுட் கோலிவுட் போல சிங்காவுட் நிறுவனம் சிங்கப்பூர் தலைமையிடமாக கொண்டு பல நல்ல படங்களை உருவாக்க போகிறது. சிங்கப்பூர் உள்ளூர் கலைஞர்களையும், நடிகர்களையும் உலகறியச் செய்யப்போவதாக போவதாக திரு.லோகன் மற்றும் திருமதி. சரஸ் கூறியுள்ளார்கள். விரைவில் முதல் படத்தை தயாரிக்க உள்ளதாவும், இதன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று திரு. சந்தோஷ் நம்பிராஜன் கூறியுள்ளார்.

Singpore pongal album song

சந்தோஷ் நம்பிராஜன் பல விருதுகளை வென்று நடுத்தர மக்களின் வலியை பேசிய டூலட் படத்தில் நாயகனாக நடித்தவர். இவர் ஒரு சிங்கப்பூர் வாழ் தமிழர் இவர் இந்த பாடல் ஆல்பத்தை இயக்கி தயாரித்து இருக்கிறார் .

இந்த பாடலின் சிறப்பம்சமே தமிழர் மற்றும் பொங்கல் பற்றிய சிறப்பம்சத்தை எடுத்துரைத்தது தான். பல மான்டேஜ்களும் பல நேரடி காட்சிகளும் பாடலுக்கான எடுக்கபட்ட காட்சிகளும் இணைக்கபட்டு இந்த பாடலை தயாரித்து உள்ளனர். இந்த பாடலில் பல உள்ளூர் மற்றும் வெளியூர் நடன கலைஞர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X