For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு.. ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு!

  |

  சென்னை: நகைச்சுவை கலந்த உரையாடலை கண்டுமகிழ நவம்பர் 1ம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு கல்ர்ஸ் தமிழ் அலைவரிசையைப் பாருங்கள். கல்ர்ஸ் தமிழ் அலைவரிசையின் பிரபல நிகழ்ச்சியான சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு, இந்த வாரம் ஒரு சிறப்பு விருந்தினரை கொண்டிருக்கிறது.

  நவம்பர் 1ம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் மற்றும் ரவிசங்கர் ஆகிய இருவரும் நகைச்சுவையோடு, அதே நேரத்தில் அர்த்தமுள்ள, சிந்தனையைத் தூண்டும் உரையாடலில் ஈடுபடுவதைக் காண தயாராகுங்கள்.

  நிகழ்ச்சியை தவறாமல் காணவேண்டும் என்பதற்கான மூன்று அடிப்படை காரணங்கள் என்னவென்றால்
  இன்றைய யுகத்தில் உறவுகள்: கடந்தகால நினைவுகளுக்கு பின்னோக்கி உங்களை அழைத்துச் செல்லும் வகையில் அவரது டிரேட்மார்க் மிமிக்ரியான முருக கிருபானந்த வாரியார் அவர்களது குரலில் சின்னி ஜெயந்த் இந்த உரையாடலை உற்சாகமாக தொடங்குகிறார்.

  செயல்பாடுகள்

  செயல்பாடுகள்

  சில நேரங்களில் உறவுகள் குறுகிய காலமே தற்காலிகமாக இருப்பதைப் போல் தோன்றுகிற இந்த நவீன உலகில், இளம் தம்பதியர் இடையே காணப்படுகிற உணர்வுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி ரவிஷங்கரிடம் கேள்விக்கனைகளை சின்னி ஜெயந்த் தொடுக்கிறார். இது குறித்து ஆர்வமும், வியப்பும் தருகிற ஒரு புதிய கண்ணோட்டத்தை அவருக்கு பதிலாக வழங்குகிறார். அதைத் தொடர்ந்து இந்த காலத்தில் இளந்தலைமுறையினருக்கு சரியான வழிகாட்டுதல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி சற்றே விரிவாகவே ரவிசங்கர் விளக்கமளிக்கிறார்.

  மகிழ்ச்சியை வழங்குபவராக

  மகிழ்ச்சியை வழங்குபவராக

  வாழ்க்கை அமைதி மற்றும் மகிழ்ச்சி போன்ற இதுவரை இடம்பெறாத புதிய தலைப்புகள் இவர்களது உரையாடலில் இடம்பெறுகின்றன. வாழ்க்கையில் எப்போதும் நிலைத்து நிற்கிற மகிழ்ச்சி நிலையை அடைவது மீது ஒரு ஆர்வத்தை கிளப்பும் ஒரு கேள்வியை சின்னி ஜெயந்த் முன்வைக்க, சுற்றியுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்குவதற்கான ஒரு காரணமாக அல்லது மகிழ்ச்சியை வழங்குபவராக இருப்பதன் மூலம் இந்த ஆனந்த நிலையை ஒருவரால் பெறமுடியும் என்று பதிலளிக்கிறார்; சுவாரஸ்யமான கருத்துகளையும், கதைகளையும் பகிர்ந்துகொள்கிறார்.

  ஆழமான சிந்தனைகளின்

  ஆழமான சிந்தனைகளின்

  வாழ்க்கையில் ஆன்மிகம் மற்றும் சமய கோட்பாடுகளை வேறுபடுத்தி காண்பது மீது ரவிசங்கரின் வழிகாட்டலையும், ஆலோசனையையும் சின்னி ஜெயந்த் கோருகின்றபோது இந்த உரையாடல் ஆழமான சிந்தனைகளின் உச்சத்தை எட்டுகிறது. கற்றல் மற்றும் கற்றலிலிருந்து விடுபடுதலுக்கான ஆண்டுகள் பற்றி பேசுகின்றபோது இந்த ஆர்வமூட்டும் கண்ணோட்டங்களை நீங்கள் மனதில் உள்வாங்கும்போது ஆழ்ந்த கருத்துக்களோடு குதூகலமூட்டும் உணர்வையும் நீங்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

  தமிழ் பேசும்

  தமிழ் பேசும்

  கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவருகின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். ஆன்மிக சிந்தனைகளுடன் நல்ல விஷயங்களை விதைப்பதின் மூலம் பாசிடிவிட்டி பரவும் நிகழ்ச்சிகளாக கலர்ஸ் தமிழ் நிறைய புதிய யுக்திகளை கையாளுகிறார்கள்

  நம்பிக்கை விதை

  நம்பிக்கை விதை

  இந்த கொரானா காலகட்டத்தில் அனைவருக்கும் தெய்வ வழிபாடு என்பது அன்றாடம் செய்யும் மிக முக்கிய ஒரு செயலாக மாறியிருக்கிறது . கடவுள் நம்பிக்கை மற்றும் ஆன்மிக சிந்தனைகள் மனிதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்று பலரும் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையின் விதையாக பல நல்ல முயற்சிகள் செய்யும் கலர்ஸ் தமிழ் குழுமம் ஆன்மீக ரசிகர்களை மட்டும் அல்லாமல் ஒரு சாமான்யனுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நிகழ்ச்சிகளை தொடர்ந்து தந்து கொண்டு இருக்கின்றனர். வெற்றி பெற பலரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

  English summary
  'Sinthanaigal Simplified‘ Talk show Participation Actor chinni jayanth
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X