விளையாட PS4 வேணும் சோனு சூட்.. ட்விட்டரில் அடம்பிடித்த மாணவன்.. சூப்பர் ஹீரோவின் பதிலை பாருங்க!
மும்பை: விளையாட PS4 வேணும் சோனு சூட் என்று கிண்டலாக கேட்டு பதிவிட்ட மாணவனுக்கு நடிகர் சோனு சூட் சரியான பதில் கொடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா லாக்டவுன் நேரத்தில் ஒரு வில்லன் நடிகர் திடீரென சூப்பர் ஹீரோவாக மாறினார்.
சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த பல்லாயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளிகளை சொந்த செலவில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

சூப்பர் ஹீரோ
இதனால் அவரை சூப்பர் ஹீரோ என்றே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அழைக்கத் தொடங்கினர். சமூக வலைதளங்களிலும் நடிகர் சோனு சூட்டுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பாராட்டு மழையாக பொழிந்தனர். பேருந்துகளிலும், ரயில்களிலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஊர்களுக்கு அனுப்பியதுடன் மட்டும் இல்லாமல், ஏகப்பட்ட நலத் திட்ட பணிகளை செய்து வருகிறார்.

மாடாய் உழைத்த பெண்களுக்கு பரிசு
ஆந்திராவின் சித்தூர் கிராமத்தில் குடும்ப கஷ்டத்தை உணர்ந்த படித்த பெண்கள் மாடுகளுக்கு பதிலாக ஏர் உழுத காட்சி இணையத்தில் வைரலான நிலையில், அதனை பார்த்து அவர்களுக்கு முதலில் மாடுகளை பரிசாக அளிக்க முடிவு செய்த சோனு சூட், பின்னர், உடனடியாக ஒரு டிராக்டரை பரிசாக அனுப்பி வைத்து அசத்தினார்.

தமிழக மாணவர்கள் மீட்பு
ஒன்று, இரண்டு உதவிகளோடு பல சூப்பர்ஸ்டார் நடிகர்கள் நிறுத்திக் கொண்ட நிலையில், தொடர்ந்து தனது தொண்டை சிறப்பாக செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். ரஷ்யாவில் லாக்டவுன் காரணமாக தவித்து வந்த 91 தமிழக மாணவர்களை மீட்க தனி விமானத்தை ஏற்பாடு செய்தும் பேருதவி செய்த சோனு சூட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.

PS4 வேணும்
முடியாதவர்களுக்கு உதவி செய்து வரும் இதுபோன்ற நல்ல உள்ளங்களையும் சிலர் சோதித்து பார்ப்பது வழக்கம். இந்நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் என தனது ட்விட்டர் ஐடியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மாணவன், இந்த லாக்டவுனில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட தனக்கு PS4 வீடியோ கேம் வேண்டும்.. சோனு சூட் ப்ளீஸ் வாங்கித் தாங்க என பதிவிட்டுள்ளார்.

சோனு சூட்டின் சூப்பர் பதில்
உங்க கிட்ட PS4 இல்லையா.. அப்போ நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவர். வேண்டுமென்றால் உங்களுக்காக சில புத்தகங்களை படிக்க வாங்கித் தருகிறேன் என அந்த ட்வீட்டை கண்டு கொள்ளாமல் விடாமல் அதற்கும் சூப்பராக பதில் அளித்துள்ளார். சோனு சூட்டின் இந்த ட்வீட்டை பார்த்த பல நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











