twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’சார் வீட்டுக்குள் குரூப்பிசம் இருக்கு’-ஜனனி,அமுது டீம்..உலக மகா நடிப்புடா சாமி-நெட்டிசன்கள் கிண்டல்

    |

    பிக்பாஸ் வீட்டுக்குள் குரூப்பிசம் இருப்பதாக கமல்ஹாசன் சுட்டிக்காட்டி கேள்வி கேட்டார்.
    இதையொட்டி நடந்த விவாதத்தில் குரூப்பிசம் இருப்பதாக அனைவரும் ஒரே குரலில் சொன்னது தான் காமெடி.
    அதிலும் ஜனனி, அமுதவாணன், அசீம் இதுபற்றி ஆவேசமாக பேசியதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    கதிரவனை காதலிப்பது யார்? குயின்ஸியா? ஷிவினா? பிக்பாஸ் வீட்டில் என்ன தான் நடக்கிறது!கதிரவனை காதலிப்பது யார்? குயின்ஸியா? ஷிவினா? பிக்பாஸ் வீட்டில் என்ன தான் நடக்கிறது!

     50 நாட்களை கடந்த சீசன் 6

    50 நாட்களை கடந்த சீசன் 6

    பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி நேற்றுடன் 50 நாளை கடந்தது. நேற்று நடந்த எவிக்ஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டார். அப்போது கமல்ஹாசன் சில கேள்விகளை ஹவுஸ்மேட்ஸ் முன் வைத்தார். அதில் முக்கியமானது குரூப்பிசம் என்று சொல்கிறார்களே வீட்டுக்குள் குரூப்பிசம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். முதலில் அனைவரும் இல்லை குரூப்பிசம் இல்லை, நட்புடன் பேசி வருகிறோம் என்று தெரிவித்தனர். ஒரு சிலர் ஒரு குருப்பிசம் இருக்கிறது என்று தெரிவித்தனர். குருப்பிசத்திற்கும் நட்புக்கும் என்ன வித்தியாசம் என்று கமல் கேள்வி எழுப்பினார்.

     ஒன்றாக அமர்ந்து பேசுவதே குரூப்பிசமா?-ஹவுஸ்மேட்ஸ்

    ஒன்றாக அமர்ந்து பேசுவதே குரூப்பிசமா?-ஹவுஸ்மேட்ஸ்

    அப்போது பேசி ஹவுஸ்மேட்ஸ்கள் "சார் நாங்க ஒண்ணா உக்காந்து பேசுறோம், பழகுகிறோம் இதை குரூப்பிசம் என்று சொல்கிறார்கள் என்று தெரிவித்தனர். ஏடிகே பேசும் பொழுது நான், விக்கிரமன் ராம்குமார் ஒன்றாக பழகி வருகிறோம். அசீமுடன் கூட இப்பொழுது நட்பு பாராட்டுகிறேன், ஆனால் ஒருவருக்கொருவர் இவரை தேர்ந்தெடு, இவருக்கு ஓட்டு போடாதே என்றெல்லாம் பேசிக் கொள்வதில்லை. ஒரு பிரச்சனையில் கருத்து என்று வரும் பொழுது அவரவர் சொந்த கருத்தை வைக்கிறோம். ஆகவே எங்களுக்குள் குரூப்பிசம் இல்லை என்று தெரிவித்தார். மைனாவும், மணிகண்டனும் நாங்கள் நட்பாக பழகி வருகிறோம் எங்களுக்கு குருப்பிசம் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.

     மணிகண்டன், மைனாவை வெளுத்து வாங்கிய கமல்

    மணிகண்டன், மைனாவை வெளுத்து வாங்கிய கமல்

    ஆனால் நட்புடன் பழகும் நீங்கள் ஒரு டாஸ்க் வந்தபோது மணிகண்டன் விட்டு கொடுத்தார் இதற்கு பெயர் என்ன என்று கேள்வி எழுப்பினார் கமல். மற்றொருபுறம் விக்கிரமன் எழுந்து மாஸ்டர், குயின்சி மகள் என்று சொல்கிறார். ரச்சிதா சேர்ந்து மூவரும் ஒரே குடும்பம் போல் இருக்கிறார்கள், இதுவும் ஒரு வகையில் குரூப்பிசம்தான், ராபர்ட் மாஸ்டர் பல இடங்களில் டாமினேட் செய்வதை பார்க்க முடிகிறது, நீதிபதி பதவிக்கு நான் போட்டியிட்டபோது குயின்சி ஜெயிக்க ராபர்ட் மாஸ்டர் முயற்சி எடுத்தார் என்று தெரிவித்தார்.

     அசீம் சொன்ன கடுமையான குற்றச்சாட்டு

    அசீம் சொன்ன கடுமையான குற்றச்சாட்டு

    அப்பொழுது பேசிய அசீம் வீட்டில் குரூப்பிசம் இருக்கிறது, ஆங்காங்கே அமர்ந்து பேசுவார்கள் அவர்களுக்குள் பேசுவார்கள், நாம் சென்றால் பேச்சை நிறுத்தி விடுவார்கள். என்ன விஷயம் என்று கேட்டால் ஒன்றும் இல்லை சும்மா பேசிகிட்டு இருந்தோம் என்று சொல்வார்கள். ஆனால் எவிக்ஷன் பிராசஸ் போன்ற விஷயங்களில் இவர்கள் அவர்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களை தேர்வு செய்யாமல் பார்த்துக் கொள்வார்கள் இதுவும் ஒரு வகையில் குரூப்பிசம் என்று தெரிவித்தார். ஒருவருக்கு பின்னால் உட்கார்ந்து அவரைப்பற்றி பேசுவதும், குரூப்பிசம்தான் என்று ஜனனி சொன்னார். ஜனனியா இப்படி சொல்வது என்று அனைவரும் பார்த்தனர். (பாதி நேரம் அவர் அதைத்தானே செய்கிறார்)

     குரூப்பிசம் பற்றி பேசிய ஜனனி..உலக மகா நடிப்புடா சாமி

    குரூப்பிசம் பற்றி பேசிய ஜனனி..உலக மகா நடிப்புடா சாமி

    ஜனனி, அமுதவாணன், அசீம் கூட்டணி விக்ரமனுக்கு எதிராக என்னென்ன பேசினார்கள், என்னென்ன செய்தார்கள் என்பது கடந்த வாரத்தில் அனைவரும் பார்த்தனர். இதை வைத்து நெட்டிசன்களும் கிண்டல் அடித்து வருகின்றனர். 24 மணி நேரம் ஒளிபரப்பு என்பதால் ஜனனியும், அமுதவாணனும், அசீமும் விக்ரமனுக்கு எதிராக கூட்டு சேர்ந்து பேசுவது அப்பட்டமாக தெரிகிறது. சில நேரங்களில் தனலட்சுமி இந்த கூட்டணியில் கலந்து கொள்வதையும் காண முடிந்தது. இந்த நிலையில் குருப்பிசம் இருக்கிறது என்று இவர்களே மற்றவர்களை குற்றம் சாட்டி எதிர்புறம் கை நீட்டி பேசுவதை நெட்டிசன்கள் 'இது உலக மகா நடிப்புடா சாமி' என்று கிண்டல் அடிக்க வருகின்றனர்.

     சபாஷ் விக்ரமன், ஷிவின் தனித்து விளையாடும் போட்டியாளர்கள்

    சபாஷ் விக்ரமன், ஷிவின் தனித்து விளையாடும் போட்டியாளர்கள்

    குரூப்பிசத்தில் சிக்காமல் இருப்பவர்கள் யார்? தனித்து இயங்குவர்கள் யார்? என்ற கேள்வியை கமல் எழுப்பினார்.அப்பொழுது பெரும்பாலானோர் விக்ரமனையும், ஷிவினையும் தெரிவித்தனர். இருவரும் எந்த குரூப்பிலும் சேராமல் இருக்கிறார்கள். சிலர் தங்களை தாங்களே சொல்லிக் கொண்டனர். கமல் அதை ஏற்கவில்லை." இப்படி போக வேண்டாம் மற்றவர்களை சொல்லுங்கள் நீங்கள் உங்களுக்கான சர்டிபிகேட் கொடுக்க வேண்டாம்" என்று கூறியதால், அனைவரும் விக்ரமன், ஷிவின் இருவரும் குருப்பிசத்தில் இல்லாமல் அனைவரிடமும் சமமாக பேசி வருவதாக தெரிவித்தனர். சிலர் ரச்சிதாவையும் கூறினர்.

     விஜய் டிவி பிரபலங்களே ஒவ்வொரு சீசனிலும் குரூப்பிச தலைவர்கள்

    விஜய் டிவி பிரபலங்களே ஒவ்வொரு சீசனிலும் குரூப்பிச தலைவர்கள்

    மொத்தத்தில் இந்த சீசன் 6-ல் பல அற்புதமான விவாதங்களை கமல் கிளப்பி விடுவதை பார்க்கிறோம். அதேபோன்று பிக்பாஸ் வீட்டுக்குள் குருப்பிசம் இல்லாமல் பார்த்துக் கொள்வதில் கமல் தீவிரமாக இருப்பதை காண முடிகிறது. கடந்த சீசன் 5-ல் பிரியங்கா, நிரூப், ஐஷேக், அபிநய், பாவனி, அமீர் என பலரும் தங்களுக்குள் குரூப் சேர்ந்து கொண்டு போட்டிகள் உட்பட அனைத்தையும் விளையாடாமல் கெடுத்து ஒன்றுமில்லாமல் ஆக்கி அதனால் ரசிகர்கள் கடுப்பானதை பார்க்க முடிந்தது. குறிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் தான் ஒவ்வொரு முறையும் குரூப்பிசத்தின் தலைவராக உள்ளனர். இந்த முறை இதை தவிர்க்க கமல்ஹாசன் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்.

      English summary
      Kamal Haasan pointed out that there is groupism in the Bigg Boss house and asked a question. The comedy was that everyone said with one voice that there was groupism in the discussion that took place. Moreover, the netizens are teasing Janani, Amudavanan and Aseem for speaking furiously about it.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X