13 லட்ச ரூபாய் .. 50 தூக்கமாத்திரை.. சீரியல் நடிகை தற்கொலைக்கு என்ன காரணம்? வெளியான தகவல்கள்!

சென்னை: குடும்ப பிரச்சனை காரணமாக சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகையின் இந்த விபரீத முடிவுக்கு காரணம் குறித்து தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாக்கியலட்சுமி மற்றும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் அருணின் அம்மாவாக நடித்து வந்தார் நடிகை ராஜேஸ்வரி. சென்னையை சேர்ந்தவர் நடிகை ராஜேஸ்வரி. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஹேமந்த் என்ற மகனும், தணி என்ற மகளும் உள்ளனர். மகன் ஹேமந்த் தற்போது கல்லூரி படிப்பை முடித்துள்ளார், மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

Siragadikka Aasai Rajeshwari Death

சிறகடிக்க ஆசை சீரியல்: கடந்த சில நாட்களாக நடிகை ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 8ந்தேதி தேதி காலை நடிகை ராஜேஸ்வரி கணவருடன் சண்டை போட்டுவிட்டு, சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். கடந்த மூன்று நாட்களாக யாரிடமும் பேசாமல், மன உளைச்சலில் இருந்து வந்த நடிகை ராஜேஸ்வரி, டிசம்பர் 11 ந் தேதி நேற்று இரவு அளவுக்கு அதிகமான பிபி மாத்திரைகளை மயங்கி விழுந்துள்ளார்.

உயிரிழந்தார்: ராஜேஸ்வரி சுயநினைவு இன்றி மயங்கி விழுந்ததைப்பார்த்து பதறிப்போன உறவினர்கள், அவரை மீட்டு கிண்டி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சில மருத்துவ முதல் உதவிகளை செய்து, மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், டிசம்பர் 12ந் தேதி நடிகை ராஜேஸ்வரி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழ்ந்தார்.

அளவுக்கு அதிகமான பிபி மாத்திரை: இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், நடிகை ராஜேஸ்வரி, தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக ரூ 13 லட்சத்தை ஏற்பாடு செய்து வைத்து இருந்தார். ஆனால், கணவர் சதீஷ் அந்த பணத்தை செலவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டு, ராஜேஸ்வரி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மிகுந்த மன வேதனையில் இருந்த ராஜேஸ்வரி மன விரக்தியால் 40க்கும் மேற்பட்ட பிபி மாத்திரைகளை போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் இறுதிச்சடங்கு நேற்று ராஜேஸ்வரியின் இல்லத்தில் நடைபெற்றது. இதில், சின்னத்திரை நடிகர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

சின்னத்திரை நடிகர்: அப்போது பேசிய சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் பரத், எந்த பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வு இல்லை. எந்தவிதமான மன கஷ்டம், பண கஷ்டமாக இருந்தாலும் நேரடியாக நடிகர் சங்கத்தை தொடர்பு கொண்டு பேசுங்கள் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். தற்போது ராஜேஸ்வரி சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கும் போது, குடும்ப பிரச்சனைக்காக உயிரை மாய்த்துக்கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X