கணவருனுடன் தினமும் சண்டை.. அளவுக்கு அதிகமான மாத்திரை.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை!
சென்னை: குடும்ப பிரச்சனை காரணமாக சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் இந்த விபரீதமான முடிவு மறைவு சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாக்கியலட்சுமி மற்றும் 'சிறகடிக்க ஆசை' உள்ளிட்ட பல மெகா தொடர்களில் நடித்து புகழ பெற்றவர் நடிகை ராஜேஸ்வரி, அந்த சீரியலில் ராஜேஸ்வரி அருணின் அம்மாவாக நடித்து வருகிறார். சென்னையை சேர்ந்தவர் நடிகை ராஜேஸ்வரி. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஹேமந்த் என்ற மகனும், தணி என்ற மகளும் உள்ளனர்.

சிறகடிக்க ஆசை: கடந்த சில நாட்களாக நடிகை ராஜேஸ்வரிக்கும் அவர் கணவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 8ந்தேதி தேதி காலை நடிகை ராஜேஸ்வரி கணவருடன் கோபித்துக்கொண்டு, சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். கடந்த மூன்று நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த நடிகை ராஜேஸ்வரி, நேற்று இரவு அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
பரிதாப மரணம்: வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த இவரை மீட்ட அவரது உறவினர்கள், உடனடியாக கிண்டியில் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சில மருத்துவ முதல் உதவிகளை செய்து, மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை நடிகை ராஜேஸ்வரி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் திடீர் மறைவு சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினேகா தற்கொலை தடுப்புமையம்: எந்தவிதமான பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல, மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவி மையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


Click it and Unblock the Notifications











