சிறை எக்ஸ் விமர்சனம்.. வருட இறுதியில் சூப்பர் தமிழ் சினிமா.. விக்ரம் பிரபுவுக்கு ஹிட்.. படம் வேற லெவல்!
சென்னை: டாணாக்காரன் இயக்குநரும், நடிகருமான தமிழ் எழுதியிருக்கும் கதையை சிறை என்கிற பெயரில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருக்கிறார். இதில் விக்ரம் பிரபு, அக்ஷய் குமார், அனிஷ்மா, மூணாறு ரமேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நாளை படம் ரிலீஸாகவிருக்கும் நிலையில் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுவருகிறார்கள்.
பிரபுவின் மகனான விக்ரம பிரபு கும்கி படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அவர் இவன் வேற மாதிரி, டாணாக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. அதேசமயம் அவரது நடிப்பு படத்துக்கு படம் மெருகேறிகொண்டே செல்கிறது. எனவே நிச்சயம் அவர் எதிர்பார்த்த வெற்றியும் பெயரும் கிடைக்கும் என திரைத்துறையில் பலரால் ஆரூடம் கூறப்பட்டது.

சிறை: இப்படிப்பட்ட சூழலில்தான் சிறை படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுத; வெற்றிமாறனின் உதவி இயக்குநரான சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருக்கிறார். அக்ஷய் குமார், அனிஷ்மா என பலர் நடித்திருக்கும் இப்படம் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகவிருக்கிறது. நேற்று பத்திரிகையாளர்களுக்கென சிறப்பு காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. படம் பார்த்தவர்கள் ஏகபோகமாக பாராட்டிவருகிறார்கள்.
படம் எப்படி இருக்கு?: படம் பார்த்த இந்த பத்திரிகையாளர், "சிறை படத்துக்கு என்னுடைய ரேட்டிங் 5க்கு 4.5. இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகி அனைவரது இதயத்தையும் சிறை பிடித்த படம் சிறை. தனது தாத்தா நடிகர் திலகத்தின் புகழையும், தந்தை பிரபுவின் நற்பெயரையும் விக்ரம் பிரபு காப்பாற்றிவிட்டார். திறமையான புதுமுகம் எல்.கே.அக்ஷய்குமார் நடிப்பு" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அருமையான திரைப்படம்: படம் பார்த்த இன்னொருவர், சுரேஷ் ராஜகுமாரியின் சிறை அருமையான திரைப்படம். மக்கள், குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுடைய உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்தப் படம் சொல்கிறது. கருத்து சூப்பர். புதுமுகமான அக்ஷய் குமாரின் நடிப்பு நேர்த்தியாக இருக்கிறது. விக்ரம் பிரபு மூத்த காவல் துறை அதிகாரியாக கச்சிதமாக பொருந்துகிறார். ஜஸ்டின் பிரபாகரின் இசையும் அற்புதம். மாபெரும் வெற்றி படம் இது" என்று தெரிவித்துள்ளார்.
தவறவிடக்கூடாத சினிமா: காவல் துறையும், சட்டத்துறையும் எவ்வளவு மூர்க்கமாக இயங்குகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது சிறை. ஒரு Police Procedural Drama படத்தை இவ்வளவு விறுவிறுப்பாகவும், கமர்ஷியலாகவும் கொடுக்க முடியும் என்பதை இயக்குநர் செய்து காட்டியிருக்கிறார். தவறவிடக்கூடாத சினிமா" என்று புகழ்ந்திருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து இன்னொருவர், "சிறை படம் பார்த்துவிட்டேன். விறுவிறுப்பான திரைப்படம். படத்தின் ரன்னிங் டைம் நன்றாக சரியாக இருக்கிறது. படம் முழுவதும் விறுவிறுப்பாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கிறது. 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோவிடமிருந்து உயர் ரக படிப்பு. அக்ஷய் குமார் அற்புதமான அறிமுகம். விக்ரம் பிரபு சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். நிச்சயம் வெற்றி பெறும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.இப்படி படம் பார்த்த அனைவருமே படத்துக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை கொடுத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











