Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராஜுமுருகன் செய்தது தான் சிறப்பான தரமான சம்பவம்: #VeryVeryBad
சென்னை: ஜீவாவின் ஜிப்ஸி படத்தில் வரும் காட்சியை பார்க்கும்போது இது தான் சிறப்பான தரமான சம்பவம் என்று தெரிகிறது.
ஜோக்கர் படம் புகழ் ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படம் ஜிப்ஸி. ஜோக்கர் படத்திலேயே வாங்கு வாங்குன்னு வாங்கிய ராஜு முருகன் இந்த படத்தில் என்ன பேசுகிறார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஜிப்ஸியின் #VeryVeryBad பாடல் டீஸர் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.
|
ஜிப்ஸி
#VeryVeryBad பாடல் டீஸர் அருமையாக உள்ளது. நீதி தேவதையின் வாயில் கருப்புத் துணி கட்டியிருப்பதுடன் டீஸர் துவங்குகிறது. அம்பேத்கர், பெரியார் புகைப்படங்களை காட்டுகிறார்கள். போலீசார் ஜிப்ஸி படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை அழைத்து வரும்போது சிறையில் உள்ளவர்கள் அவரிடம் கேட்கும் கேள்விகள் அருமை.
கைது
தோழர் ஸ்டெர்லைட்டா, அணு உலையா, நியூட்ரினோவா, மணல் கொள்ளையா எதுல உங்களை கைது பண்ணினார்கள் என்று பிற கைதிகள் சந்தோஷ் நாராயணனை கேட்கிறார்கள். மக்கள் விரோத திட்டத்திற்கு எதிரா, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரா துண்டறிக்கை கொடுத்தீர்களா என்று கேட்கும் பெண் யாரை நினைவூட்டுகிறார் என்பது உங்களுக்கே தெரியும். சிறையில் திருமுருகன் காந்தி, பியூஷ் மனுஷ் இருப்பதாகவும் காட்டியுள்ளனர்.
திருநங்கை
சாமியார், திருநங்கைகள் பிரச்சனை, தீண்டாமை சாதிக் கொடுமை, சேலம் 8 வழிச் சாலை போராட்டம், ஈழத் தமிழர் பிரச்சனை, 7 தமிழர் விடுதலை என்று அனைத்து பிரச்சனைகளையும் பேசிவிட்டார் ராஜு முருகன். வெரி வெரி பேட் என்ற பாட்டு போட்டதற்காக கைது செய்ததாக கூறுகிறார் சந்தோஷ் நாராயணன்.
ஹிட்
ஏதாவது ஒரு பிரச்சனையை பேசினாலே எதிர்ப்பு கிளம்பி விளம்பரம் கிடைக்கும். ராஜு முருகன் அத்தனை பிரச்சனையையும் கை வைத்துவிட்டார். ஜிப்ஸிக்கு அமோகமாக இலவச விளம்பரம் கிடைத்து சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.