Siren Blue Sattai Review: “இது ஏற்கனவே வந்து நொந்து போன கதை..” சைரன் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
சென்னை: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள சைரன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து சைரன் படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
சைரன் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
ஜெயம் ரவியின் சைரன் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள சைரன் ஏற்கனவே பலமுறை வந்து நொந்து போன கதையாகும் என நெகட்டிவாக விமர்சனம் கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் கதை பற்றி கூறியுள்ள அவர், செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார் ஜெயம் ரவி.

இந்நிலையில், தனது அப்பாவையும் மகளையும் பார்ப்பதற்காக 15 நாட்கள் பரோலில் வருகிறாராம் ஜெயம் ரவி. அவர் வெளிய வந்ததும் ஊரில் இருக்கும் முக்கியமான பிரமுகர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இதனால் போலீஸாரின் சந்தேகம் ஜெயம் ரவி மேல் திரும்புவதாகவும், அதன் பின்னர் என்ன ஆனது என்பது தான் இந்தப் படத்தின் கதை என்றும் கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். செய்யாத குற்றத்திற்காக ஜெயிலுக்குப் போன ஒரு அப்பாவி, திரும்ப வந்து நான் செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்குறதுக்கு பதிலா அத பண்ணிட்டே போய்டுறேன்னு எதிரிகள பழிவாங்குறார்.
இதனையடுத்து தனது விமர்சனத்தை முன்வைக்கும் ப்ளூ சட்டை மாறன், சைரன் கதை இந்திய சினிமாவில் ஒரு லட்சம் தடவைக்கும் மேல் வந்துள்ளது. இந்த மாதிரி வந்த கதைகள கூட எடுக்கலாம், ஆனா வந்து நொந்து போன கதையெல்லாம் படமாக எடுக்கக் கூடாது. இந்தப் படத்துக்கெல்லாம் இதுக்கு மேல ஒரு பஞ்ச் யோசிக்க முடியாது, இதுவே அதிகம் என பங்கமாக கலாய்த்துள்ளார். அதேபோல் ஏற்கனவே வந்த கதையாக இருந்தாலும் திரைக்கதை நல்லா பண்ணிருக்கலாம்.
கமலின் ஒரு கைதியின் டைரி கதையும் சைரன் மாதிரி தான் என அந்தப் படத்தின் திரைக்கதையை சுட்டிக் காட்டி விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை. சைரன் படத்தில் வில்லன்களை ஜெயம் ரவி ஏன் கொலை செய்றார்ன்னு ஆடியன்ஸுக்கு புரியவே இல்லை. அதெல்லாம் கடைசில தான் சொல்றாங்க. படத்துக்குள்ள ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதாகவும், இது படத்தை தான் குழப்பியுள்ளதாகவும், ரசிகர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
அதேபோல், படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் ரொம்பவே போர் அடிப்பதாகவும், அதனை சுவாரஸ்யமே இல்லாமல் எடுத்து வைத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். முக்கியமாக ஹீரோயின் வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் சுத்தமாக கனெக்ட் ஆகவே இல்லை என்றும், படமாக பார்க்கும் போது ரசிக்க எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார். மொத்தத்தில் சைரன் பண்டலில் கட்டி வைக்கப்பட்ட உப்புமா படம் என பங்கமாக கலாய்த்துள்ளார். அதேபோல் பட்ஜெட்டிலும் படம் ஒர்த் இல்லை எனவும், இப்படியே போனால் சீரியல் மாதிரி தான் படங்கள் வெளியாகும் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சைரன் படத்தில் ஜெயம் ரவி ஆம்புலன்ஸ் ட்ரைவராக நடித்துள்ளார். அதனால் படமே ஆப்ரேஷன் தியேட்டர் மாதிரி இருக்கு எனவும் கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











