Siren Box Office Day 1: தோல்வியில் இருந்து மீண்டாரா ஜெயம் ரவி..? சைரன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்

சென்னை: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள சைரன் திரைப்படம் நேற்று வெளியானது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் ஜெயம் ரவிக்கு கம்பேக் கொடுத்துள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 1000 ஸ்க்ரீன்களுக்கும் அதிகமாக ரிலீஸான சைரன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் பற்றி தற்போது பார்க்கலாம்.

சைரன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்: பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து பிரமிக்க வைத்திருந்தார் ஜெயம் ரவி. மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் உட்பட மிகப் பெரிய காம்போவில் உருவான பொன்னியின் செல்வன், ஜெயம் ரவிக்கும் நல்ல சக்சஸ் கொடுத்தது. இதனால் அவரது நடிப்பில் வெளியான அகிலன், இறைவன் படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்தன. ஆனால் இந்த இரண்டு படங்களுமே மிகப் பெரிய தோல்வியைத் தழுவின.

 Siren Box Office Day 1: Jayam Ravis Siren has collected 1.40 crores on its first day

இதனால் சைரன் படத்தை அதிகம் நம்பியிருந்தார் ஜெயம் ரவி. ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் கமர்சியல் படமாக உருவான சைரன், நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. ஜெயம் ரவியுடன் அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெயம் ரவி ஆம்புலன்ஸ் ட்ரைவராக நடித்துள்ள சைரன் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆக்‌ஷன் ப்ளஸ் சென்டிமெண்ட் சேர்ந்து பக்கா கமர்சியல் மூவியாக உருவாகியுள்ளது என ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.

அதேபோல், ஜெயம் ரவி, யோகி பாபு கூட்டணியில் காமெடியும் தியேட்டரை அதிர வைத்துள்ளதாம். இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ்ஜின் திரைக்கதை தான் சைரன் படத்திற்கு பெரிய பலம் என்றும் நெட்டிசன்கள் கூறினர். கடந்த வாரம் வெளியான லால் சலாம், லவ்வர் படங்கள் ஏமாற்றிய நிலையில், நேற்று ரிலீஸான சைரன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக அமைந்துள்ளது. இதன்மூலம் ஜெயம் ரவி தரமான கம்பேக் கொடுத்துள்ளார் என்றே கோலிவுட் வட்டாரங்கள் துதி பாடி வருகின்றன.

இந்நிலையில் சைரன் திரைப்படம் முதல் நாளில் 1.40 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அகிலன், இறைவன் படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஜெயம் ரவியின் படம் முதல் நாளில் ஒரு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஜெயம் ரவியின் படங்களுக்கு ஓரளவு எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

காதலிக்க நேரமில்லை, ஜீனி, கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதில் மூன்று படங்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருவதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. சைரன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் ஜெயம் ரவியும் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X