Siren Box Office Day 2: பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ஜெயம் ரவி... சைரன் 2-வது நாள் வசூல் ரிப்போர்ட்

சென்னை: ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் சைரனுக்கு எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் கிடைத்துள்ளது. அதன்படி முதல் நாளை விட இரண்டாவது நாளில் அதிகம் கலெக்‌ஷன் செய்துள்ளது சைரன்.

சைரன் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்
ஜெயம் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான 'ஜெயம்' ரவி, தற்போது கோலிவுட்டில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். ஜெயம் ரவி தனது படங்களில் அதிகமாக சாக்லேட் பாய் லுக் கேரக்டரில் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பேராண்மை, தனி ஒருவன், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் ஜெயம் ரவி கேரியரில் ஒரு மைல் கல்லாகவே அமைந்தன.

 Siren Box Office Day 2: Jayam Ravis Siren has collected 1.73 crores on its Second day

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனில் ராஜராஜ சோழனாக நடித்த ஜெயம் ரவி, தற்போது ஒரேநேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். முக்கியமாக கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அகிலன், இறைவன் என தோல்விப் படங்களை கொடுத்த ஜெயம் ரவி, தற்போது சைரன் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். இந்த வாரம் வெளியான சைரன் ஜெயம் ரவியின் மார்க்கெட்டை கொஞ்சம் தூக்கி நிறுத்தியுள்ளது.

ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள சைரன் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜெயம் ரவியுடன் அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். ரங்கட் பாய் லுக், சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் என ஜெயம் ரவியின் ஆம்புலன்ஸ் ட்ரைவர் கேரக்டர் படத்திற்கு பலம் சேர்த்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

ஆக்‌ஷன் ப்ளஸ் சென்டிமெண்ட் என கமர்சியலாக உருவாகியுள்ள சைரன் படத்தில் திரைக்கதையும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் அளவிலும் சைரன் மாஸ் காட்டி வருகிறது. முதல் நாளிலேயே நல்ல ஓபனிங் கிடைத்த சைரன் 1.40 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இதனால் இரண்டாவது நாளான சனிக்கிழமை அன்றும் கலெக்‌ஷன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் சனிக்கிழமையான நேற்றும் சைரன் வசூல் அதிகரித்துள்ளது. அதன்படி சைரன் இரண்டாவது நாள் வசூல் 1.73 கோடி என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் 3.13 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளது சைரன். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அகிலன், இறைவன் படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X