Siren Box Office Day 3: தொடர்ந்து முன்னேற்றம்.. சைரன் 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை வெளியானது. ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் முதல் நாளை விட அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் சைரன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதிகரித்துள்ளது.
சைரன் 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ்
பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அகிலன், இறைவன் படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. இதனால் சைரன் படத்தின் ரிசல்ட் எப்படி இருக்கும் என அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆம்புலன்ஸ் ட்ரைவராக நடித்துள்ளார் ஜெயம் ரவி.

அவருடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள சைரன் படத்திற்கு முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. செய்யாத குற்றத்திற்காக ஜெயிலுக்கு செல்லும் ஜெயம் ரவி, பின்னர் பரோலில் வந்து வில்லன்களை பழிவாங்குகிறார். தமிழ் சினிமாவில் வழக்கமாக வந்துபோன கதை தான் என்றாலும், திரைக்கதை சூப்பர் என ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.
அதேபோல், ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் என பக்கா கமர்சியல் படமாகவும் சைரன் வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சைரன் படத்திற்கு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, சைரன் முதல் நாளில் 1.40 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் 2.08 கோடி கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல் நாளை விடவும் இரண்டாவது நாள் கலெக்ஷன் அதிகரித்த நிலையில், மூன்றாவது நாளான நேற்றும் சைரன் வசூல் அதிகரித்துள்ளது. முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று சைரன் திரைப்படம் 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாம். இதன்படி முதல் மூன்று நாட்களில் 5.50 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளது சைரன். இது அகிலன், இறைவன் படங்களின் வசூலை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அரை டஜன் படங்களுக்கும் மேல் கைவசம் வைத்துள்ள ஜெயம் ரவி, தரமான ஒரு வெற்றிக்காக காத்திருந்தார். அது தற்போது சைரன் திரைப்படம் மூலம் கிடைத்துள்ளது. இதனால் ஜெயம் ரவி நடித்து வரும் காதலிக்க நேரமில்லை, ப்ரதர், ஜீனி ஆகிய படங்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. சைரனை தொடர்ந்து ஜெயம் ரவியின் ப்ரதர் அல்லது காதலிக்க நேரமில்லை படம் அடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











