உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை.. வருத்தப்பட்ட ரசிகர்.. ஜெயம் ரவி என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்துக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில், ஜெயம் ரவியின் தீவிர ரசிகர் ஒருவர், உங்களுடன் செல்பி எடுப்பதற்காக பல மணி நேரம் காத்திருந்தேன். ஆனால், செல்பி எடுக்காமல் அனுப்பிவிட்டீர்கள், உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று இணையத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு ஜெயம் ரவி மன்னிப்பு கேட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வராக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானத் திரைப்படம் சைரன். அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரக்கனி, வீரம் யுவானா, அழகம் பெருமாள், அஜய் என பலர் நடித்துள்ளனர்.

ஜெயம் ரவியின் சைரன்: ஜெயம் ரவி மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். கொலை பழியை சுமந்துகொண்டு சிறையில் இருக்கும் ஜெயம் ரவியின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், பரோலில் வெளியே வருகிறார். ஜெயம் ரவி வெளியே வரும் நேரத்தில் தொடர்ந்து கொலைகள் நடக்கிறது.
பாசிட்டிவ் விமர்சனம்: செய்யாத கொலைக்காக சிறையில் தண்டனை அனுபவித்து பரோலில் வெளியே வந்திருக்கும் ஜெயம் ரவியும், போலீஸ் கீர்த்தி சுரேஷும் புதிதாக நடக்கும் கொலைகளுக்காக ஒரே நேர்கோட்டில் இணைகின்றனர். இந்த கொலைகளை ஜெயம் ரவி தான் செய்திருப்பாரோ? என்ற சந்தேகம் போலீஸ் அதிகாரியான கீர்த்தி சுரேஷூக்கு வருகிறது. இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் சைரன் படத்தின் கதை. இந்த படத்தின் ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.
மணி கணக்கில் காத்திருந்தேன்: இந்நிலையில் சைரன் வெளியான அன்று ஜெயம் ரவி மதுரையில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்திருக்கிறார். அப்போது, அங்கிருந்தவர்கள் ஜெயம் ரவியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். ஆனால், ஜெயம் ரவியுடன் செல்பி எடுக்க முடியாமல் போன ரசிகர் ஒருவர், சோசியல் மீடியாவில், நான் உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று ஆவலுடன் பல மணி நேரமாக காத்துக்கொண்டு இருந்தேன், ஆனால், அது முடியாமல் போனது. உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுடன் மட்டும் நீங்கள் செல்பி எடுத்துர்கள். என்னை போன்றவர்களை அனுப்பி விட்டீர்கள். இது எனக்கு மோசமான நாள். உங்களிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை என்று வருத்தமாக பதிவிட்டிருந்தார்.
வெறுப்பு வேண்டாம்: ரசிகரின் இந்த பதிவினைப் பார்த்த ஜெயம் ரவி, மன்னித்து விடுங்கள் பிரதர். அன்றைய தினம் கிட்டத்தட்ட 300 பேருடன் நான் செல்பி எடுத்துக் கொண்டேன். உங்களுடன் எடுப்பது எப்படி தவறவிட்டேன் என்று எனக்கு தெரியவில்லை. சென்னைக்கு வாருங்கள் கண்டிப்பாக செல்பி எடுத்துக் கொள்ளலாம். வெறுப்பு வேண்டாம், அன்பை பரப்புங்கள் என்று கூறி இருக்கிறார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











