Actor Rajinikanth: பிப்ரவரி 9ம் தேதி ரஜினியுடன் மோதும் படங்கள்.. இதோ லிஸ்ட்!

சென்னை: பொங்கலையொட்டி ரிலீசாகியுள்ள அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1 மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் படங்கள் எராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தனுஷின் கேப்டன் மில்லர் படம் ரசிகர்களை அதிரடி சரவெடியாக கவர்ந்து வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளன. அடுத்தடுத்த இடங்களில் சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 மற்றும் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் படங்கள் உள்ளன. பொங்கலையொட்டி அடுத்தடுத்த விடுமுறை தினங்கள் வந்துள்ள நிலையில், இந்தப் படங்கள் திரையரங்குகளில் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பொங்கலுக்கு ரிலீசாகவிருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படம், பிப்ரவரி மாதம் 9ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்தப் படத்துடன் ஜெயம் ரவி, மணிகண்டன் ஆகியோரின் படங்களும் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிலீஸ் தேதிக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் இந்த பட்டியலில் மேலும் படங்கள் இணையுமா அல்லது இணைந்த படங்கள் பின்வாங்குமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Siren, Lover movies going to clash with Rajinis Lal Salaam on February 9th

சிறப்பான துவக்கம்: கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் திரைத்துறைக்கு மிகவும் சிறப்பாகவே அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியிலேயே பொங்கல் கொண்டாட்டமாக விஜய் மற்றும் அஜித்தின் வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாகி ஆண்டின் சிறப்பான துவக்கத்தை துவங்கி வைத்தன. இந்த இரு படங்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நல்ல வசூலை பெற்றன. அதேபோல இந்த ஆண்டிலும் ஆண்டின் துவக்கத்திலேயே தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்கள் தமிழில் ரிலீசாகி சிறப்பான துவக்கத்தை கொடுத்துள்ளன.

பொங்கல் ரிலீஸ் படங்கள்: இந்த 4 படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படங்கள் வரிசையில் இணைந்துள்ளன. குறிப்பாக தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் அதிகமான வரவேற்பை பெற்றுள்ளன. கடந்த 12ம் தேதி ரிலீசான இந்தப் படங்கள் 4 நாட்களில் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளன. இனிவரும் இரு நாட்களும் விடுமுறை தினம் என்பதால் இந்த வசூல் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் இந்தி மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் உருவாகி ரிலீசாகியுள்ளன.

ரஜினியின் லால் சலாம் படம்: இந்நிலையில் பொங்கலையொட்டி ரிலீசாகும் என்று கூறப்பட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் ரிலீஸ் பிப்ரவரி மாதம் 9ம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதமாக நடந்துவரும் நிலையில் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கலாம்.

மணிகண்டன் படம்: இந்நிலையில் இந்தப் படத்துடன் நடிகரும் இயக்குநருமான மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள லவ்வர் படம் பிப்ரவரி 9ம் தேதி மோதவுள்ளது. படத்தில் மணிகண்டனுடன் ஸ்ரீகௌரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். முன்னதாக மணிகண்டன் நடிப்பில் வெளியான குட்நைட் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில், லவ்வர் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தை பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ள நிலையில் இந்தப் படமும் மணிகண்டனுக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் ரொமாண்டிக் காமெடி களத்தில் உருவாகியுள்ளது.

ஜெயரம்ரவியின் சைரன்: இந்த படங்களின் வரிசையில் ஜெயம் ரவியின் சைரன் படமும் இணைந்துள்ளது. இந்தப் படமும் பிப்ரவரி 9ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜெயம்ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஆண்டனி பாக்கியராஜ். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளதும் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 9ம் தேதிக்கு இன்னும் ஒருமாதம் கூட இல்லாத நிலையில், 3 படங்கள் இந்த தேதியை லாக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X