’சைரன்’பட இயக்குநருக்கு சீக்கிரமே டும் டும் டும்.. அந்தோணி பாக்கியராஜ் திருமணம் எப்போது தெரியுமா?

சென்னை: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சைரன் 108 படத்தை இயக்கிய அந்தோணி பாக்யராஜுக்கு விரைவில் திருமணம் நடக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் படத்தை இயக்கிவிட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்கிற முடிவோடு இருந்த அந்தோணி பாக்யராஜ் சைரன் படத்தை முடித்த நிலையில், தற்போது திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறுகின்றனர்.

Siren Movie Director Anthony Bhagyaraj marriage will happen on this date


இந்த மாதமே அவரது திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமண தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

சைரன் படம்: இந்த ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி திரையரங்குகளில் சைரன் 108 திரைப்படம் வெளியானது. திலக வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி வயதுக்கு வந்த பெண்ணுக்கு அப்பாவாக நடித்திருந்தார். ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்த திலக வர்மனுக்கு வாய் பேச முடியாத நர்ஸ் அனுபமா மீது காதல் வர இருவரும் திருமணம் செய்துக் கொள்கின்றனர். இன்னொருவருக்கு உதவி செய்ய போய் சிக்கலில் சிக்கும் ஜெயம் ரவி தனது மனைவியை வில்லன் ஆட்கள் கொலை செய்து விட்டு அந்த பழி தன் மீது விழ ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். பரோலில் வரும் அவர் பக்காவாக பிளான் போட்டு கொலைகளை செய்து விட்டு எப்படி தப்பிக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. போலீஸ் அதிகாரியாக வரும் கீர்த்தி சுரேஷ் கடைசி வரை ஜெயம் ரவியை குற்றவாளி என நிரூபிக்க போராடும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பார்.

பெரிதாக ஓடவில்லை: சைரன் திரைப்படத்தின் கதை வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தாலும் மேக்கிங் மற்றும் எடிட்டிங்கில் நடந்த சொதப்பல் காரணமாக படம் பெரிதாக ஓடவில்லை. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான அந்த படத்தை ஓடிடி ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து பார்த்தனர்.

அந்தோணி பாக்கியராஜ் திருமணம்: ஜெயம் ரவியை வைத்து சைரன் படத்தை இயக்கிய அந்தோணி பாக்கியராஜ் வரும் மே 19ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது திருமணத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். சைரன் படத்தை விட அடுத்த படத்தை அந்தோணி பாக்கியராஜ் திறமையாக செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X