Movies: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இன்று தியேட்டரில் வெளியாகும் படங்கள்!

சென்னை: வெள்ளிக்கிழமை வந்துவிட்டாலே சினிமா பிரியர்களுக்கு கொண்டாட்டம் தொடங்கிவிடும். அந்த வகையில், இன்று அதிரடி ஆக்ஷன், க்ரைம், திரில்லர் ஜனரில் பல திரைப்படங்கள் இன்று வெளியாகி உள்ளன. பெரிய ஹீரோ படங்கள் ரிலீஸ் ஆகாததால், சிறு பட்ஜெட் படங்கள் அதிகம் இன்று வெளியாகி உள்ளன.

ஜூலை 21ஆம் தேதியான இன்று தியேட்டர்களில் 6 தமிழ் திரைப்படங்கள் உள்பட சில முக்கியமான ஹாலிவுட் படங்களும் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்ட்டைப் பார்க்கலாம்!

Siren, pambattam Today theatre release movies

சைரன்: ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் சைரன். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியிருக்கிறார். படத்தில் யோகிபாபு, சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் மற்றும் பின்னணி இசையை சாம் சிஎஸ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பாம்பாட்டம்: பாலிவுட் நடிகை மல்லிகா செராவத், ஜீவன், நடிகை ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் பிரியா, சுமன், பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இனியன் ஜே. ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்ரீஷ் இசை அமைத்திருக்கிறார். வி.சி வடிவுடையான் இயக்கத்தில் நான்கு வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட படம் பாம்பாட்டம் ஒரு வழியாக இன்று வெளியாக உள்ளது. பாம்மை மையமாக வைத்து வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் மல்லிகா ஷெராவத் மகாராணியாக நடித்துள்ளார்.

Ooru Peru Bhairavakona: அப்புச்சி கிராமம் என்ற சைஃபை காமெடி படத்தை கொடுத்தவர் விஐ ஆனந்த். இவர், தெலுங்கில் Ekkadiki Pothavu Chinnavada, Okka Kshanam என ஹிட் படங்களைக் கொடுத்தார். இப்போது அவர் இயக்கியிருக்கும் ஃபேண்டஸி படம் ooru Peru Bhairavakona. பைரவகோனா என்ற ஊரின் மர்மத்தை அறிந்து கொள்ள செல்லும் இளைஞன் சந்திக்கும் ஆபத்துகள் என்ன? அங்கிருக்கும் மர்மம் என்ன? என்பதே கதை.

Thundu: ரியாஸ் ஷெரீஃப் இயக்கத்தில் பிஜூ மேனன், ஷைன் டாம் சாக்கோ நடித்திருக்கும் படம் Thundu. ப்ரமோஷனுக்குக் காத்திருக்கும் கான்ஸ்டெபிளுக்கு, எக்ஸாம் ரூபத்தில் வருகிறது சோதனை. அதில் பாஸ் ஆக அவர் எடுக்கும் முயற்சிகளை காமெடியாக சொல்கிறது படம்.

Land Of Bad: William Eubank இயக்கத்தில் Russell Crowe நடித்திருக்கும் படம் Land Of Bad. அமெரிக்க டெல்ட்டா ஃபோர்ஸ் எதிரிகளின் எல்லைக்குள் நுழைந்து, பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும் என்றால், விமானப்படை கேப்டன் எட்டியின் வழிகாட்டுதல் வேண்டும். 48 மணிநேர போரட்டத்தின் முடிவு என்ன என்பதே அழகாக சுவாரசியமாக கொண்டு சென்றுள்ளனர்.

ரீ ரிலீஸ்: இன்று வெளியாகும் படங்கள் மட்டுமில்லாமல், காதலர் தினத்தை முன்னிட்டு விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த 96 திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், மின்னலே, பிரேமம், Om Shanti Oshana போன்ற படங்கள் குறிப்பிட்ட தியேட்டரில் வெளியாகின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X