சொன்னா நம்ப மாட்டீங்க.. இந்த கிராமத்துல எல்லாருமே தளபதி விஜய் ரசிகர்கள் தானாம்?
சென்னை: ஒரு கிராமம் முழுக்க விஜய் ரசிகர்கள் உள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? தமிழகத்தில் அப்படியும் ஒரு கிராமம் உள்ளது.
கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக வலம் வரும் தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
ஆனால், இந்த கிராமத்தில் தங்களின் குழந்தைகளுக்கு கூட நடிகர் விஜய் நடித்த படங்களின் பெயர்களையே வைத்து வருகின்றனராம்.

அப்படி என்ன கிராமம்
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தனது நடிப்பால் கவரும் ஆற்றல் விஜய்க்கு உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய்க்கு இருந்த ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக மாறி பொது மக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றன. அதில் சிறுகூடல் ரசிகர் மன்றம் என்பது மிகவும் பிரபலமானது. அந்த சிறுகூடல் கிராமம் முழுவதுமே தளபதிக்கு ரசிகர்கள் உள்ளார்களாம்.

சிறுகூடல் கிராமம்
தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சிறுகூடல் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்களாம். நடிகர் விஜய் மீது அந்த ஊர் மக்களுக்கு அளவற்ற பாசமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் படங்கள் வெளியானாலே திருவிழாவாக அந்த ஊர் மக்கள் அதனை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு விஜய் பெயர்
அது மட்டுமின்றி தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் பெயருக்கு பின்னால் நடிகர் விஜய்யின் பெயரை இணைப்பது. மேலும், நடிகர் விஜய் நடித்த மதுர, கில்லி போன்ற படங்களின் பெயர்களையும் பிள்ளைகளுக்கு சூட்டி உள்ளதாக சிறுகூடல் விஜய் ரசிகர் மன்ற தலைவர் பார்த்திபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜய்க்கு சிலை
மேலும், நடிகர் விஜய்க்கு பிரம்மாண்ட சிலை ஒன்றையும் சீக்கிரமே சிறுகூடல் ஊரில் வைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வர விரும்புகிறீர்களா? என்கிற கேள்விக்கு சினிமாவில் விஜய்யை ரசிப்பதே தங்களுக்கு போதுமான ஒன்றாக இருக்கிறது. அரசியல் வருகை குறித்து தளபதி தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

விஜய்யின் வருகைக்காக
சிறுகூடல் கிராமம் முழுவதுமே விஜய் ரசிகர்கள் உள்ள தகவலை அறிந்த நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜய்யின் அம்மா சோபா அந்த கிராமத்திற்கு சென்று, அங்குள்ள மக்களுக்கு பிரியாணி விருந்து போட்டுள்ளனர். தளபதி விஜய்யின் வருகையை எதிர்நோக்கி அந்த கிராமமே காத்திருப்பதாகவும், விரைவில் விஜய் அந்த கிராமத்துக்கு வருவார் என்றும் பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video

மக்கள் மனங்களில்
பொங்கலுக்கு வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் அதிக வசூல் ஈட்டிய இந்திய திரைப்படம் என்கிற பெயரையும் மாஸ்டர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தளபதி 65, 66 என அடுத்தடுத்து அறிவிப்புகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருந்தாலும், மக்களின் மனங்களில் விஜய் இந்த அளவுக்கு இருப்பது என்பது தான் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











