தளபதி 66 படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: நடிகர் விஜயின் தளபதி 66 படத்தை இயக்கப் போகும் இயக்குநர் உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.
Recommended Video
தமிழ் சினிமாவில் நடைபெறும் சுவாரசிய தகவல்களை டாப் 5 பீட்ஸ் என வீடியோவாக வெளியிட்டு வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், விஜயின் தளபதி 66 படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளதாகவும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேபோல் இயக்குநர் ஹரியின் அருவா படத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார் பிகே. மேலும் நடிகர் அருள்நிதி நடிக்கும் டைரி படம் குறித்த தகவல்கள் அவரது பிறந்தநாளில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பிச்சைக்காரன் 2 படத்தை வேறு ஒரு இயக்குநர் இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் ஹன்சிகா மோத்வானி அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











