சிறுத்தை சிவா - சூர்யா இணையும் படத்தை தயாரிக்கவுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம்!
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூரரை போற்று படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் நம்பிக்கை அளிக்க கூடிய வகையில் உள்ளது.
தற்போது சூர்யா - சிவா இணையும் படத்தை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யாவுடன் கூட்டணி
சிறுத்தை படத்தின் மூலம் அறிமுகமான சிவா வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தல அஜித் உடன் சேர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கியுள்ளார். அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

அடுத்தடுத்த படங்கள்
இந்நிலையில் நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் 2 வார படப்பிடிப்பு மட்டுமே மிச்சம் உள்ள நிலையில் ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேலின் அடுத்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.
Recommended Video

ப்ரீ ப்ரொடக்ஷன்
சூர்யா - சிவா கூட்டணி உறுதியானதை அடுத்து எந்த விதமான அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. அண்ணாத்த படப்பிடிப்பு சில நாட்கள் கிடப்பில் போடப்பட்ட போது இயக்குனர் சிவா சூர்யா படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை தொடங்கி செய்து வந்தார். பின்னர் ஏதும் அறிவிப்பு வெளியாகவில்லை.

பரவும் தகவல்
அண்மையில் தமிழில் தடம் பதித்துள்ள Sony Liv தமிழ் OTT தளம் சோனி என்டர்டைன்மெண்ட் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் சோனி என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் தான் சூர்யா - சிவா கூட்டணியின் படம் வெளிவரவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











