சிறுத்தை சிவா தம்பிக்கு என்ன ஆச்சு? அஜித்தின் வீரம் பட நடிகர் பாலா மருத்துவமனையில் திடீர் அனுமதி
கொச்சி: தமிழ், மலையாளம் படங்களில் நடித்து வரும் நடிகர் பாலா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் அன்பு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாலா. அந்த படத்தில் இடம்பெற்ற தவமின்றி கிடைத்த வரமே பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனங்களை கவர்ந்துள்ளது.
இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் அஜித்தின் வீரம் படத்திலும் கார்த்தியின் தம்பி படத்திலும் நடித்துள்ளார்.

நடிகர் பாலா
தமிழ் சினிமாவில் அன்பு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாலா. அந்த படத்தைத் தொடர்ந்து காதல் கிசுகிசு, கலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்தில் தம்பியாக நடித்த பாலா. த்ரிஷ்யம் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடித்த தம்பி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மருத்துவமனையில் அனுமதி
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் நடிகர் பாலா குடும்பத்துடன் கேரளாவிலேயே செட்டில் ஆகி உள்ளார். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளார். அவருடன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.

கல்லீரல் பாதிப்பு
கேரளாவில் வசித்து வரும் பாலா தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் ஷிஃபிகின்டே சந்தோஷம் படம் வெளியானது. இந்நிலையில், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலாவுக்கு சில மாதங்களாகவே கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அதற்கான சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறுத்தை சிவா தம்பி
இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான பாலாவை மருத்துவமனையில் சென்று பார்க்க சூர்யா 42 படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அல்லது படத்தின் ஷூட்டிங் பேக் செய்யப்பட்ட பிறகு சிறுத்தை சிவா தம்பியை காணப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் தம்பிக்கு முக்கியமான கதாபாத்திரத்தை சிறுத்தை சிவா கொடுத்திருப்பார்.

2வது மனைவிக்கு கொலை மிரட்டல்
கடந்த 2016ம் ஆண்டு பாடகி அம்ருதாவை திருமணம் செய்து கொண்ட பாலா மனக்கசப்பு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். 40 வயதாகும் நடிகர் பாலா கடந்த 2021ம் ஆண்டு எலிசபெத் எனும் மருத்துவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். ஒரு மாதத்திற்கு முன்னதாக கஞ்சா போதையுடன் 3 பேர் அடங்கிய கும்பல் தான் இல்லாத நேரம் பார்த்து தனது மனைவியை கொல்ல வீட்டின் கதவை தட்டியதாக போலீஸில் பரபரப்பு புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











