Siruthai Siva Brother Bala: சிறுத்தை சிவா தம்பி பாலாவுக்கு முடிந்தது அறுவை சிகிச்சை

திருவனந்தபுரம்: Siruthai Siva Brother Bala (சிறுத்தை சிவா தம்பி பாலா) இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி பாலாவுக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.

தமிழில் சிறுத்தை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. அதனைத் தொடர்ந்து அவர் அஜித்துடன் வீரம், விஸ்வாசம், வேதாளம், விவேகம் என தொடர்ச்சியாக பணியாற்றினார். இதில் விவேகம் தவிர்த்து மற்ற படங்கள் ஹிட்டடித்தன. தற்போது அவர் சூர்யாவை வைத்து படம் இயக்கிவருகிறார். இந்தப் படமானது மொத்தம் பத்து மொழிகளில் வெளியாகிறது. மேலும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது.

Siruthai Siva Brother Bala: Director Siruthai Sivas younger brother Bala has successfully undergone a liver transplant

சிறுத்தை சிவாவின் தம்பியும் நடிகர்: சிறுத்தை சிவாவுக்கு பாலா என்ற தம்பி இருக்கிறார். பாலாவும் சினிமாவில் இருக்கிறார். அவர் அன்பு, காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அஜித்துடன் அவர் நடித்த வீரம் படம் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. அப்படத்தில் அவர் அஜித்துக்கு தம்பியாக நடித்திருந்தார். இவர் 2016ஆம் ஆண்டு அம்ருதா என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அது விவாகரத்தில் முடிந்தது.

இரண்டாவது திருமணம் செய்துஜ்கொண்ட பாலா:முதல் திருமணம் முறிந்த பிறகு சில வருடங்களாக தனியாக இருந்த பாலா கடந்த 2021ஆம் ஆண்டு மருத்துவர் எலிசபெத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டுவிட்டதாக மலையாள ஊடகங்கள் அவ்வப்போது எழுதிவந்தன. ஆனால் அதுகுறித்து இரு தரப்பும் எதுவும் கூறாமல் மௌனம் காத்து வந்தது.

Siruthai Siva Brother Bala: Director Siruthai Sivas younger brother Bala has successfully undergone a liver transplant

உடல்நிலை பாதிக்கப்பட்ட பாலா: சூழல் இப்படி இருக்க பாலாவுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு உடல்நலம் பாதிப்பு உருவானது. கடந்த 6ஆம் தேதி கடுமையான இருமல் மற்றும் வயிற்று வலி காரணமாக கொச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார். மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

பாலாவுக்கு நடந்த அறுவை சிகிச்சை: இந்நிலையில் பாலாவுக்கு இன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த அவர் தற்போது ஐசியூவில் இருப்பதாகவும் விரைவில் நார்மல் வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து விரைவில் நலம் பெற வேண்டுமென பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Siruthai Siva Brother Bala: Director Siruthai Sivas younger brother Bala has successfully undergone a liver transplant

மனைவிக்கு பாலா வைத்த கோரிக்கை: முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், "ஒரு மேஜர் அறுவை சிகிச்சை எனக்கு நடக்கவிருக்கிறது. அதில் நான் சாவதற்கும் வாய்ப்பு உண்டு. பிழைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. எல்லாம் பிரார்த்தனைபடிதான் நடக்கும்" என்றார். அதோடு மட்டுமின்றி, தனது மனைவியை பார்த்து எனக்கு ஏதேனும் நடந்துவிட்டால் நீ இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும். மருத்துவரை திருமணம் செய்துகொள் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X