Kanguva - கங்குவா அர்த்தம் என்ன?.. போஸ்டரில் இவ்வளவு டீட்டெயில்ஸா?.. சிவா பகிர்ந்த சீக்ரெட்ஸ்

சென்னை: Kanguva (கங்குவா) சூர்யா 42 படத்தின் பெயர் கங்குவா என வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பெயருக்கு என்ன அர்த்தம் என்பது குறித்த ஆராய்ச்சியில் ரசிகர்கள் இறங்கியிருந்தனர். தற்போது கங்குவா பெயருக்கான அர்த்தத்தை படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா வெளியிட்டிருக்கிறார்.

Siruthai Siva Explains About Kanguva Meaning

சூர்யா சமீபகாலமாக நடித்துவரும் படங்கள் அனைத்துமே ஹிட்டாகியுள்ளன. வெறும் வசூல் மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் அவரது படங்களுக்கு பலமான வரவேற்பு கிடைத்துவருகிறது. அப்படி அவர் நடித்த சூரரைப் போற்று படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்காக சூர்யாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஜெய் பீம் சூர்யா: சூர்யாவின் கேரியரிலேயே மிக முக்கிய படமாக அமைந்தது ஜெய் பீம். ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான அந்தப் படம் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. அதேபோல் சூர்யாவுக்கும் மிகச்சிறந்த பெயரை ஜெய் பீம் பெற்றுக்கொடுத்தது. அதுமட்டுமின்றி சூர்யா போல் முன்னணி நடிகர்கள் சமூக அக்கறையுள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன.

Siruthai Siva Explains About Kanguva Meaning

சூர்யா 42: ஜெய் பீம் படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42ஆவது நடித்துவருகிறார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பெரும் பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரிக்கிறார். 10 மொழிகளில் 3டியில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் சரித்திர கால கதையாக என எதிர்பார்க்கப்படுகிறது.

திஷா பதானி கதாநாயகியாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கோலிவுட்டில் இப்போது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் சூர்யா 42 படமும் ஒன்று. ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தாலும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது.

கங்குவா: படத்தின் பெயரும், போஸ்டரும் நேற்று அறிவிகப்பட்டது. அதன்படி படத்துக்கு கங்குவா என பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் டீசரை பார்த்த சூர்யா ரசிகர்கள் படம் நிச்சயம் மெகா ஹிட்டடிக்கும் எனவும், கங்குவா என்ற பெயர் வித்தியாசமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

அதேசமயம் படத்தின் பெயருக்கு என்ன அர்த்தம் என்பது குறித்த ஆராய்ச்சியிலும் அவர்கள் இறங்கினர். அதுமட்டுமின்றி ரஜினி நடித்த கங்வா என்ற ஹிந்தி படத்தின் டைட்டிலைத்தான் கங்குவா என மாற்றியிருப்பதாகவும் சிலர் கூறினர்.

Siruthai Siva Explains About Kanguva Meaning

அர்த்தம் என்ன?: இந்நிலையில் படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா கங்குவா என்பதற்கான அர்த்தம் குறித்து விளக்கமளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், "கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவா என்ற பெயருக்கு மேலே இருப்பது வட்டெழுத்து ஆகும். இது பழங்கால தமிழ். அதாவது மூன்றாம் நூற்றாண்டிற்கு பிறகு இந்த வட்டெழுத்து வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் நெருப்பு. கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள் ஆகும்.

இதில் இரண்டுமே இருக்கும்: இந்தப் படத்தை பத்து மொழிகளில் வெளியிடுகிறோம். சூர்யாவின் கதாபாத்திர பெயர் கவர்ச்சியாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். இது ஃபேண்டஸி கலந்த ஆக்‌ஷன் படம். அதுமட்டுமின்றி பீரியாட்டிக் காலமும், சமகாலமும் கலந்து இருக்கும்.

ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் மூலம் தனித்துவமான அனுபவத்தை கொடுக்க விரும்புகிறோம். இது நிச்சயம் மறக்கமுடியாத அனுபவத்தை ரசிகரளுக்கு கொடுக்கும். போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் கழுகு, நாய் உள்ளிட்டவைகளுக்கும் கங்குவா கதைக்கும் சம்பந்தம் இருக்கிறது." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X