வீரம் படப்பிடிப்பில் அஜித்துக்கும் எனக்கும் பெரிய சண்டை ... சிறுத்தை சிவா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சென்னை : சிறுத்தை சிவா மற்றும் தல அஜித் தொடர் கூட்டணியில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து வசூலில் பல சாதனைகளை புரிந்தது.

Recommended Video

தல Ajith unseen Drone Training Video • Dhaksha Team

வீரம் படத்தில் தொடங்கிய இவர்களின் கூட்டணி துளியும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நான்கு படங்களில் இணைந்து பணியாற்றி திரையுலகினரை பிரமிக்க வைத்தனர்.

இவ்வாறு தல அஜித்தும், சிறுத்தை சிவாவும் நான்கு படங்களில் தொடர்ந்து பணியாற்றிய நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் சாருக்கும் எனக்கும் அந்த சீன்ல ரொம்ப வாக்குவாதம் நடந்துச்சு என யாரும் அறியாத அதிர்ச்சி தகவலை சிவா வெளியிட்டுள்ளார்.

நம்பவே முடியாத ஆக்சன்

நம்பவே முடியாத ஆக்சன்

இந்திய சினிமாவில் கமர்ஷியல் திரைப்படங்களுக்கும் கமர்ஷியல் இயக்குனர்களுக்கும் எப்பொழுதுமே வரவேற்பு இருந்துகொண்டு வருகிறது. காதல், காமெடி, நம்பவே முடியாத ஆக்சன் காட்சிகள், கதறி அழ வைக்கும் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் என அத்தனை அம்சமும் இருக்கும் கமர்சியல் திரைப்படங்கள் இன்றளவும் பெருமளவு வந்து கொண்டுதான் இருக்கிறது.

தொடர்ந்து 4 திரைப்படங்களில்

தொடர்ந்து 4 திரைப்படங்களில்

அவ்வாறு வெளியாகும் கமர்ஷியல் திரைப்படங்கள் பல வெற்றிகளை பெற்று வரும் நிலையில் ஒரு சில திரைப்படங்கள் தோல்வியையும் தழுவி உள்ளது. மேலும் ஒரு நடிகர் இயக்குனரின் மீது வைக்கும் நம்பிக்கை என்பது அவரின் வாழ்க்கையையே ஒப்படைப்பதை போன்றது. அவ்வாறு தமிழ் சினிமா சமீபத்தில் 2 அல்லது 3 திரைப்படங்களில் மட்டுமே ஒரே இயக்குனர் மற்றும் நடிகர் தொடர்ந்து பணியாற்றயதைப் பார்த்து வந்த நிலையில், தல அஜித்தும் சிறுத்தை சிவாவும் இதுவரை தொடர்ந்து 4 திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

மீண்டும் கோபிசந்த் உடன் இணைந்து

மீண்டும் கோபிசந்த் உடன் இணைந்து

தெலுங்கு, மலையாளம், தமிழ் என பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த இயக்குனர் சிவா தெலுங்கில் நடிகர் கோபிசந்த் நடிப்பில் வெளியான "சௌரியம்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடைந்த நிலையில் மீண்டும் நடிகர் கோபிசந்த் உடன் இணைந்து "சங்கம்" என்ற திரைப்படத்தை இயக்கிய சிவா தமிழில் முதல்முறையாக கார்த்தி நடித்த "சிறுத்தை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தமிழ் ரீமேக்கான

தமிழ் ரீமேக்கான

தெலுங்கில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான "விக்ரமகாடு" படத்தின் தமிழ் ரீமேக்கான "சிறுத்தை" படம் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியடைந்து திரையரங்குகளில் வசூலை அள்ளி பொதுமக்களிடையே சிவாவை சிறுத்தை சிவா என பிரபலப்படுத்தியது. சிறுத்தை படத்திற்கு பின் அஜித்துடன் இணைந்து வீரம் படத்தை இயக்கிய சிவா அதைத் தொடர்ந்து வேதாளம், விவேகம், விஸ்வாசம் எனத் தொடர்ந்து நான்கு திரைப்படங்களை இயக்கினார்.

அதிர்ச்சி தகவலை

அதிர்ச்சி தகவலை

இவ்வாறு தல அஜித்துடன் தொடர்ந்து நான்கு படங்களை இயக்கிய ஒரே இயக்குனர் என்ற பெருமையைப் பெற்ற இயக்குனர் சிறுத்தை சிவா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்-க்கும் எனக்கும் ஒரு காட்சியில் ரொம்ப வாக்குவாதம் ஏற்பட்டதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அஜித் பிடிவாதமாக

அஜித் பிடிவாதமாக

பொதுவாக இயக்குனர்களின் கதையிலும் திரைக்கதையிலும் பெரிதாக மாற்றம் சொல்லாமல் அவர்களின் போக்கிலேயே நடித்துக் கொடுக்கும் இயல்பைக் கொண்ட தல அஜித், வீரம் படத்தில் அனைவரும் ரசித்த ரயில் சண்டைக்காட்சியை டூப் வைத்து எடுக்க சிவா நினைத்திருக்க, அதற்கு தல அஜித் பிடிவாதமாக நானே செய்கிறேன். டூப் ஏதும் வேண்டாம், அடிபட்டால் படட்டுமே

 டூப் ஏதும் போடாமல்

டூப் ஏதும் போடாமல்

நடிக்கும் வேலையை செய்ய வந்துவிட்டு இந்த ரிஸ்க் கூட எடுக்கலைன்னா எப்படி, என்று இயக்குனர் சிவா சொல்ல சொல்ல கேட்காமல் அந்தப் பிரமாதமான ரயில் சண்டைக் காட்சியை நடித்து பிரமாதப்படுத்தியதுடன், டூப் ஏதும் போடாமல், தானாகவே முன்வந்து ரிஸ்க் எடுத்து அந்த சண்டைக்காட்சியை எடுத்து முடித்தோம் என அந்தப் பேட்டியில் சிவா இதுவரை யாரும் அறியாத தகவலை கூறியிருந்தார்.

பெரிய விஷயம் தான்

பெரிய விஷயம் தான்

இவ்வாறு வீரம் திரைப்படத்தில் வரும் அந்த அட்டகாசமான சண்டை காட்சிக்கு பின் அஜித்தின் இவ்வளவு பெரிய அர்ப்பணிப்பு உள்ளதா என ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து அஜித் படங்களை மட்டுமே இயக்கி வந்த சிறுத்தை சிவா தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X