Kanguva: முதல் நாள் முதல் காட்சி.. படம் பார்ப்பதற்கு முன் இயக்குநர் சிவா சொன்ன சந்தோஷமான விஷயம்!

சென்னை: சூர்யா - திஷா பதானி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு இன்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. படத்தினை இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 11 ஸ்க்ரீன்களுக்கு மேல் படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு முன்னர் இயக்குநர் சிவா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், திஷா பதானி, நட்டி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ளார். படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

suriya kanguva siruthai siva press meet

படத்திற்கு தமிழ்நாடு தவிர கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மற்றும் அதிகாலை 6 மணிக் காட்சிகளுக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் இன்றும் நாளையும் அதாவது, நவம்பர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் மட்டும் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் படத்தினை வெளிநாட்டில் மற்றும் வெளிமாநிலங்களில் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

சிறுத்தை சிவா: இப்படியான நிலையில், தமிழ்நாட்டில் படத்தினை ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க திட்டமிட்ட படக்குழு காலை 9 மணிக் காட்சிக்காக காத்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் படத்தினைப் பார்க்க படக்குழு வந்திருந்தது. அப்போது செய்தியாளர்களை இயக்குநர் சிறுத்தை சிவா சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, " கங்குவா திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. ரொம்ப ரொம்ப சந்தோசமாக உள்ளது.

suriya kanguva siruthai siva press meet

ஆர்வம்: அமெரிக்காவில் படம் பார்த்த நண்பர்கள் இப்போதுதான் போன் செய்தார்கள். கங்குவா படம் மிகப்பெரிய வெற்றிப் படம் எனக் கூறுகின்றார்கள். மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் ஆர்வமாகவும் உள்ளது. நாங்களுமே ஆர்வமாக உள்ளோம். இன்னும் சற்று நேரத்தில் படம் பார்க்கச் செல்லவுள்ளோம் எனக் கூறினார்.

ஒளிப்பதிவாளர் வெற்றி: அதேபோல் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி பேசுகையில், " இரண்டரை ஆண்டுகால உழைப்புக்குப் பின்னர் கங்குவா படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. ஆந்திரா, கேரளாவில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் 9 மணி காட்சிக்குத்தான் அனுமதி கிடைத்தது. நாங்கள் இப்போது 9 மணிக் காட்சியைப் பார்க்கவுள்ளோம். கேரளா மற்றும் ஆந்திராவில் படம் பார்த்த நண்பர்கள் படம் நன்றாக இருப்பதாகவும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் எனவும் கூறியுள்ளார்கள். படத்திற்கு தமிழ்நாடு மக்கள் மற்றும் இந்திய மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகின்றோம்" எனக் கூறினார். இவர்களின் இந்த பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

suriya kanguva siruthai siva press meet

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X