Ajith - ஏகே 62 இருக்கட்டும்.. அஜித்தின் 63ஆவது பட இயக்குநர் யார் தெரியுமா?..

சென்னை: Ajith (அஜித்) ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வராவிட்டாலும் மகிழ் திருமேனிதான் இயக்குநர் என்பது உறுதியாகிவிட்டது. இந்தச் சூழலில் ஏகே 62 படத்துக்கு பிறகு அஜித் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அஜித் ரொம்பவே உற்சாகமடைந்திருக்கிறார் எனவும் தனது அடுத்த படத்தையும் இதேபோல் ஹிட்டாக்கிட வேண்டும் எனவும் தீவிர முனைப்போடு அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் அவர் பைக்கில் உலகத்தை சுற்றும் பயணத்தையும் தள்ளி வைத்திருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது.

Siruthai Siva Will Direct Ajiths 63rd Movie

ஃபார்முலாவை மாற்றிய அஜித்: எப்போதும் ஒரு படத்தை முடித்த பிறகே தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும்படி பார்த்துக்கொள்வார் அஜித். ஆனால் ஹெச்.வினோத்துடன் இணைந்ததிலிருந்து தனது ஃபார்முலாவை மாற்றினார். அதன் வெளிப்பாடாக துணிவு படத்தில் நடித்தபோதே அஜித்தின் 62ஆவது படம் குறித்து அறிவிப்பு வெளியானது. லைகா தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.

விக்னேஷ் சிவன் அவுட்: மகிழ் திருமேனி இன்: ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன படத்தின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு பிடிக்காததால் அவர் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதனையடுத்து இயக்குநர் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏகே 62 கதை என்ன?: இதற்கிடையே மகிழ் திருமேனி சொன்ன ஒன்லைன் முதலில் லைகாவுக்கு பிடித்துப்போக அதையே டெவலப் செய்ய சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது கால தாமதம் ஆகலாம் என்பதால் கொரியன் படம் ஒன்றை நம் ஊருக்கு தகுந்தவாறு மாற்றுமாறு மகிழ் திருமேனி அறிவுறுத்தப்பட அதுவும் தாமதம் ஆகும் என்பதால் தனது கதையையே மீண்டும் டெவலப் செய்ய ஆரம்பித்திருக்கிறார் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் எழுந்திருக்கிறது.

ஏகே 62வுக்கு அடுத்தது யாருடன் கூட்டணி?: அஜித்தின் 62ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பே இன்னமும் வெளியாகாத சூழலில் அஜித்தின் 63ஆவது படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, அந்தப் படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தக் கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்கள் வெளியாகின. அவைகளில் விவேகம் தவிர மற்ற அனைத்து படங்களும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 42வில் மும்முரம்: சிவா இப்போது சூர்யாவின் 42ஆவது படத்தை இயக்கிவருகிறார். 10 மொழிகளில் 3டியில் பிரமாண்டமாக வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு ஞானவேல் ராஜா பல கோடிகள் செலவு செய்திருக்கிறார். படத்தின் பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அஜித்தின் 63ஆவது படத்துக்கு சிறுத்தை சிவா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X