முத்தக்காட்சிக்கு நோ.. படவாய்ப்பு குறைய இதுதான் காரணம்.. மிருணாள் தாக்கூர் பேட்டி!

சென்னை: சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாள் தாக்கூர். பாலிவுட் சினிமாவில் பிரபல இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், மிக குறுகிய காலத்திலேயே பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

மிருணாள் தாகூர், ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ஹர்சவர்தன் இயக்கத்தில் துல்கர் சர்மானுக்கு ஜோடியாக சீதா ராமம் படத்தில் தழையத் தழைய புடவை கட்டிக்கொண்டு நடித்திருந்தார். பீல் குட் லவ் ஸ்டோரியை நீண்ட நாட்களுக்கு பின் திரையில் பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போனார்கள். அந்த அளவுக்கு துல்கர் சல்மானின் நடிப்பும், மிரணாள் தாகூரின் நடிப்பும் எதார்த்தமாக இருந்தது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Sita Ram actress Mrinal Thakur said that she does not act in many films if there is a kiss scene

லஸ்ட் ஸ்டோரீஸ் 2: இந்த படத்தை தொடர்ந்து 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' ஆந்தாலஜி தொடரில் விவகாரமாக நடித்தார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இரண்டாம் பாகத்தில், தமன்னா, மிருணாள் தாகூர், விஜய் வர்மா, கஜோல் ஆகியோர் நடித்திருந்தனர். ஆர். பால்கி, கொங்கோனா சென் இணைந்து நான்கு வித்தியாசமான கதையை கொடுத்துள்ளனர். இதில் 'Made For Each Other' ஆந்தாலஜி தொடரில் நடித்திருந்தார்.

பேமிலி ஸ்டார்: தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர், தெலுங்கில் அண்மையில் நானியுடன் "ஹாய் நான்னா" படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து விஜய் தேவரக்கொண்டாவுடன் "பேமிலி ஸ்டார்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

முத்தக்காட்சிக்கு நோ: இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மிருணாள் தாக்கூர், பல படங்களை தவறவிட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதில், நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை நான் விரும்பியதில்லை. அதை எனது பெற்றோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால் பல படங்களை மறுத்தேன். ஒரு நடிகராக, நீங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும், ஏனென்றால் சில நேரங்களில் அது படத்திற்கு தேவையாக இருக்கும். ஆனால், அப்படி முத்தக்காட்சியில் நான் நடிக்க நோ சொன்னதால், பல திரைப்படங்களை தவறவிட்டேன்.

தர்மசங்கடம்: உண்மையில் அது போன்ற காட்சிகளில் நடிக்க நான் பயப்படுவேன். இதனால் அந்த காட்சி வேண்டாம் என்று சொல்வேன். ஆனால் எத்தனை நாட்கள் இவ்வாறு சொல்ல முடியும் என்று எனக்கு தெரியவில்லை. என் பெற்றோருடன் அமர்ந்து படம் பார்க்கும் போது, நெருக்கமான காட்சி வந்தால், அது தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதனால், இதுபோன்ற கதைக்கு நான் ஒகே சொல்வது இல்லை என்று மிருணாள் தாக்கூர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்ஸ், லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜி தொடரில் விவகாரமாக நடித்துவிட்டு இப்போது முத்தக்காட்சியில் நடிக்க விருப்பம் இல்லையா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X