சீதா ராமம் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

சென்னை : நடிகர் துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

Recommended Video

Sita Ramam Movie Review | Yessa ? Bussa ?| Sita Ramam |Dulquer Salmaan|*Review

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார்.

கடந்த வாரம் 5ம் தேதி வெளியான 'சீதா ராமம்' திரைப்படம் வசூலிலும் கலக்கி வருகிறது.

சீதா ராமம்

சீதா ராமம்

இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். இந்தப்படம் கடந்த வாரம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிவுள்ளது.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

'சீதா ராமம்' படத்தில் ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன், சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிட்டுள்ளது. விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சீதாவை தேடும் ராம்

சீதாவை தேடும் ராம்

சீதா ராமம் படத்தின் கதை 1964ம் ஆண்டு நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. உறவுக்கு யாரும் இல்லாத ராம் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கையே சீதா ராமம். விடுமுறைக்கு செல்ல வீடே இல்லாத ராணுவ வீரனின் ஒரு செயல், நாட்டில் பல உறவுகளை பெற்றுக்கொடுக்கிறது. அதில் ராமின் மனைவி சீதா என்ற பெயரில், முகவரி இல்லாத கடிதம் வருகிறது. அந்த சீதாவை காதலிக்க தொடங்கும் ராம், அவளை தேடி புறப்படுகிறான். அவளை கண்டுபிடித்தானா? அவர்கள் சேர்ந்தார்களா? இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதை

வெற்றி கொண்டாட்டம்

வெற்றி கொண்டாட்டம்

சீதா ராமம்படம் வெளியான முதல் 3 தினங்களில் மட்டும் 23 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வந்தன. தற்போது படம் வெளியாகி 5 தினங்களாகி உள்ள நிலையில், 33 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீதா ராமம் படத்தின் வெற்றியை படக்குழு இன்று கேக் வெட்டி கொண்டாடி உள்ளது. இதில், துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டிக் கொண்டாடினர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட அனைத்து மொழி ரசிகர்களும், சீதா ராமம் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X