விமானத்தில் பிறந்தநாள் பார்ட்டி, சீதா ராமம் நாயகி லூட்டி: கூட யாரெல்லாம் இருந்தாங்கன்னு தெரியுமா?

ஐதராபாத்: துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'சீதா ராமம்' படம் வரும் 5ம் தேதி வெளியாகிறது.

தெலுங்கு, தமிழ், மலையாளம் என 3 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார்.

இந்நிலையில், 'சீதா ராமம்' படத்தின் நாயகி மிருணாள் தாகூர் தனது பிறந்தநாளை செம்மையாக கொண்டாடியுள்ளார்.

தெலுங்கில் அறிமுகம்

தெலுங்கில் அறிமுகம்

2014ல் மராத்தி மொழி படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமான மிருணாள் தாகூர், முதன்முறையாக 'சீதா ராமம்' மூலம் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். தெலுங்கில் முதல் படத்திலேயே, துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் ஹனு ராகவபுடி என பெரிய கூட்டணியில் நடித்திருந்தப்பது மிருணாள் தகூருக்கு நல்ல நம்பிக்கை கொடுத்துள்ளது.

இதுதான் கதை

இதுதான் கதை

'சீதா ராமம்' படத்தின் ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதைப் பார்க்கும் போதே படத்தின் கதை இபடித்தான் இருக்கும் என கெஸ் பண்ண முடிகிறது. ராஷ்மிகாவிற்கு வரும் ஒரு கடிதத்தை சீதா என்பவரிடம் கொடுக்க வேண்டும் என, அவரை தேடுகின்றார். ஆனால், அது முடியாமல் போக, சீதாவின் காதலன் ராம்-ஐ முதலில் கண்டுபிடிக்க ராஷ்மிகா முடிவெடுக்கிறார். 1965ம் ஆண்டில் இருந்து தொடங்கும் இந்த கதை, திடீரென துப்பாக்கி குண்டுகள் முழங்க அதிரடியாக நகர்கிறது. அதனிடையே துல்கர் சல்மான், மிருணாள் தாகூரின் மென்மையான காதலும் பல கதைகள் பேசுகின்றன.

கவனம் ஈர்க்கும் சீதா

கவனம் ஈர்க்கும் சீதா

படத்தின் மொத்த கதையும் சீதாவை தேடியே பயணிக்கிறது. அதனால், மிருணாள் தாகூரின் சீதா பாத்திரம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. துல்கர் சல்மானின் காதலியாக மிருணாள் தாகூர் நடித்திருப்பது மட்டுமே உறுதியாகியுள்ளது. இதனால், படம் வெளியாகும் போது மிருணாள் தாகூரின் பாத்திரம் குறித்த சஸ்பென்ஸ்கள் அனைத்துக்கும் விடைதெரியும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

விமானத்தில் பிறந்தநாள்

விமானத்தில் பிறந்தநாள்

'சீதா ராமம்' படத்தின் ப்ரோமோஷனுக்காக மொத்தப் படக்குழுவினரும் பரபரப்பாக இருக்கின்றனர். இதனிடையே மிருணாள் தகூர் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து விமானத்தில் பறந்து கொண்டிருந்த 'சீதா ராமம்' படக்குழுவினர், மிருணாள் தாகூருக்கு பர்த்டே சாங் பாடி, சூப்பராக வாழ்த்தியுள்ளனர். இதனை எதிர்பார்க்காத மிருணாள் தாகூர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். துல்கர் சல்மான், இயக்குநர் ஹனு ராகவபுடி ஆகியோரும் விமானத்தில் பறந்தபடி மிருணாள் தாகூருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X