சீதா ராமம் ப்ளாக் பஸ்டர் ஹிட்: மும்பை மீடியாக்களுக்கு நன்றி சொன்ன துல்கர் சல்மான் டீம்

மும்பை: துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா நடித்த 'சீதா ராமம்' திரைப்படம் ஆக.5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஹனு ராகவபுடி இயக்கத்தில் காதல் பின்னணியில் உருவாகியிருந்த சீதா ராமம் படத்தை ரசிகர்களை கொண்டாடித் தீர்த்தனர்.

பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள 'சீதா ராமம்' திரைப்படம் தற்போது அமேசானில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்களை உருக வைத்த சீதா ராமம்

ரசிகர்களை உருக வைத்த சீதா ராமம்

மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான், தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடந்த மாதம் (ஆக.5) வெளியான சீதா ராமம் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. ஹனுராகவபுடி இயக்கிய இந்தப் படத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாகிஸ்தான், காஷ்மீர், ஹைதராபாத் போன்ற கதைக்களத்தின் பின்னணியில் காதல் காவியமாக வெளியான சீதா ராமம், ரசிகர்களை ரொம்பவே கொண்டாட வைத்தது.

ஓடிடி ரசிகர்களிடமும் சிறப்பான வரவேற்பு

ஓடிடி ரசிகர்களிடமும் சிறப்பான வரவேற்பு

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியான சீதா ராமம் படம், தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சீதா ராமம் இப்போதும் ஒருசில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. மேலும், இந்தப் படம் இதுவரை 95 கோடி ரூபாய்க்கும் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான சம்பவம் செய்து வருகிறது. துல்கர் சல்மான் கேரியரில் தரமான திரைப்படமாக சீதா ராமம் அமைந்துள்ளதாக சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விமர்சகர்களை சுளுக்கெடுத்த துல்கர் சல்மான்

விமர்சகர்களை சுளுக்கெடுத்த துல்கர் சல்மான்

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்த துல்கர் சல்மான், தனது நடிப்பை ட்ரோல் செய்தவர்களை கடுமையாக விமர்சித்திருந்தார். "ஆரம்பத்தில் எனக்கு நடிப்பு வராது என விமர்சித்தவர்களை நன்றாக நினைவிருக்கிறது. அவர்களின் சோஷியல் மீடியா ஐடிக்கள் கூட எனக்கு தெரியும். நேர்மையான விமர்சனமாக இல்லாமல், தனிப்பட்ட முறையில் ட்ரோல் செய்த அவர்களை மறக்கவே மாட்டேன்" எனக் கூறியிருந்தார். துல்கர் சல்மானின் இந்த பேட்டி, பலரையும் கவனிக்க வைத்தது.

மும்பை மீடியாக்களுக்கு நன்றி சொன்ன சீதா ராமம் டீம்

மும்பை மீடியாக்களுக்கு நன்றி சொன்ன சீதா ராமம் டீம்

சீதா ராமம் படம் எதிர்பாராத சிறப்பான வெற்றியை வசமாக்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஹிட் அடித்ததோடு, வசூலையும் வாரிக் குவித்துள்ளது. இதனையடுத்து மும்பை பறந்த சீதா ராமம் படக்குழு, மும்பை மீடியாக்களுக்கு நன்றி தெரிவித்தனர். துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், இயக்குநர் ஹனு ராகவபுடி ஆகியோர் நேரில் சென்று மும்பை மீடியாக்களுக்கு நன்றி கூறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் துல்கர் சல்மானும் மிருணாள் தாகூரும் செம்ம ஸ்டைலிஷாக கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X