»   »  சித்தர் கையிலாயம்... நவீன தொழில்நுட்பத்தில் ஆதிகுரு சித்தரின் வாழ்க்கை வரலாறு!

சித்தர் கையிலாயம்... நவீன தொழில்நுட்பத்தில் ஆதிகுரு சித்தரின் வாழ்க்கை வரலாறு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவையையொட்டியுள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இப்போதும் வாழ்வதாகக் கருதப்படும் சித்தர்களைப் பற்றிச் சொல்லும் படம் சித்தர் கையிலாயம்.

ப்ரபஞ்சம் சினி சர்க்யூட் நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாய் எஸ்.ரமேஷ்.

Siththar Kayilayam, a movie on Velliyangiri Siththar

இயற்கையை மீறிய சக்தி படைத்தவர்களே சித்தர்களாக கருதப்படுகிறார்கள். கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரங்களில் மரணத்தை வென்ற சித்தர்கள் இன்றும் வாழ்வதாக கருதப்படுகிறது. மனிதர்கள் சிறப்புற வாழ்வதற்காக பல்வேறு அதிசயங்களையும் அற்புதங்களையும் பல்வேறு காலங்களில் நிகழ்த்தியிருக்கிறார்கள். அப்படியொரு அதீத சக்தி படைத்த ஆதிகுரு சித்தரின் வாழ்க்கை வரலாறுதான், ‘சித்தர் கையிலாயம்'.

சித்தரின் வாழ்க்கை வரலாற்றுடன், இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான காதல், மோதல், நகைச்சுவை கலந்த படமாக இதனை உருவாக்கியிருக்கிறாராம் சாய் எஸ் ரமேஷ்.

Siththar Kayilayam, a movie on Velliyangiri Siththar

வெள்ளியங்கிரி மற்றும் அதனை சுற்றிய காட்டுப்பகுதிகளில் நடைபெறும் இந்தப் படத்தின் புதுமுக நாயகனாக அறிமுகமாகிறார் அருண். கன்னடத்தில் புகழ்பெற்ற அர்ச்சனா சிங் இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கிறார். வில்லன் வேடங்களில் சிலம்புச் செல்வம், மணிமாறன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் வெளுத்துக்கட்டு அப்பு, சின்ன ராசு, செல்வகுமார், மாஸ்டர் மௌலி ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Siththar Kayilayam, a movie on Velliyangiri Siththar

இந்தப்படத்துக்கு இசை அமைக்கிறார் டி.கெளதமசந்திரன். ஏ அஜய் ஆதித் ஒளிப்பதிவு செய்கிறார். விருதுநகர் மூளிபட்டி எம்.ராமலிங்கம் தயாரிக்கிறார்.

English summary
Siththar Kayilayam, a new movie in production on Velliyangiri Siththas.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil