கண்ணா, நாம படம் பண்ணலாமா?: அஜீத் பட இயக்குனரிடம் கேட்ட ரஜினி?
சென்னை: அஜீத்தை அடுத்து சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.
சிவா தற்போது அஜீத்தை வைத்து விவேகம் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் மீண்டும் அஜீத்தையே இயக்கக்கூடும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. சிவா அஜீத்தை வைத்து வீரம், வேதாளம் படங்களை இயக்கினார். தற்போது மூன்றாவது முறையாக அஜீத்துடன் பணியாற்றி வருகிறார்.
ரஜினி ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். அதன் பிறகு அவர் சிவா இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
சிவா இயக்கத்தில் நடிக்க ரஜினியே விருப்பம் தெரிவித்ததாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications