விஸ்வாசம் வெற்றி.. தல-யைத் தொடர்ந்து தளபதியை இயக்கும் சிவா?

சிவா இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை: விஸ்வாசம் பட வெற்றியைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா விஜய்யை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சிவா. இதில் விஸ்வாசம் படம் இதுவரை இல்லாத அளவிற்கு நல்ல வசூலைத் தந்து வருகிறது.

Siva to direct Vijay?

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் பிங்க் ரீமேக்கில் நடித்து வருகிறார் அஜித். அதற்கு அடுத்த படமும் அதே கூட்டணியில் தான் தயாராகிறது. இதனால் அடுத்ததாக சிவா யாரை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் உள்ளது.

இந்நிலையில், மீண்டும் சத்யஜோதிக்கே சிவா ஒரு படம் இயக்குவார் எனக் கூறப்படுகிறது. அதோடு இந்தப் படத்தில் விஜய் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சத்யஜோதி தயாரிப்பில் விஜய் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது அந்தப் படத்தை சிவா தான் இயக்குகிறார் என்றும் கூறுகிறார்கள்.

இப்படம் ஆக்சன் படமாக திட்டமிடப்பட்டு வருகிறது. இது குறித்து இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லு படத்தைத் தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு சிவா இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X