Exclusive: ஷூட்டிங் ஸ்பாட்டில் பாண்டிராஜை டென்ஷனாக்கிய சிவா.. உண்மையை சொல்லும் ரீல் மாமா பையன்..!

நம்ம வீட்டு பிள்ளை படப்பிடிப்பின் போது எல்லோரும் நடிப்பதை விட்டுவிட்டு கிரிக்கெட்டை பார்த்ததாக நடிகர் ரெஜித் மேனன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

NAMMA VEETU PILLAI FDFS PUBLIC REVIEW | SIVAKARTHIKEYAN | PANDIRAJ | AISHWARYA | FILMIBEAT TAMIL

சென்னை: நம்ம வீட்டு பிள்ளை படப்பிடிப்பின் போது நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் நடிகர் ரெஜித் மேனன்.

தமிழில் விக்ரமனின் நினைத்தது யாரோ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ரெஜித் மேனன். கிருஷ்ணாபாண்டி இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த எம்பிரான் படம் இவரது இரண்டாவது தமிழ் படமாகும். மலையாளம் மற்றும் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார் ரெஜித். இந்த படத்தில் நடித்தது குறித்து நம்முடன் அவர் பகிர்ந்துகொண்டதாவது.

யோசித்த பாண்டிராஜ்

யோசித்த பாண்டிராஜ்

"புதியகீதை பட இயக்குனர் ஜெகன் சார் தான் என்னை பாண்டியராஜ் சாரிடம் கூட்டிட்டு போனார். விக்ரமன் சார் படத்துல ஹீரோவாக நடிச்சிருக்கீங்க, இந்த படத்தில் சின்ன ரோல் தான். சரியா வருமா என யோசித்தார். சிவகார்த்த்திகேயன், பாண்டியராஜ், சன் பிக்சர்ஸ்ன்னு பெரிய கூட்டணியில் உருவாகிற படம். பிஸ் பண்ண வேண்டாம்னு இயக்குனரை கம்பள் பண்ணி ஒத்துக்க வெச்சேன்.

மாமா பையன்

மாமா பையன்

இந்த படத்துல நான் சிவாவின் மாமா பையனா நடிச்சிருக்கேன். படத்துல எனக்கு சின்னதா ஒரு லவ் டிராக் இருக்கு. என்னுடைய கதாபாத்திரம் கொஞ்சம் காமெடியா இருக்கும். இத்தனை பெரிய ஆட்கள் நடிக்கிற படத்துல நானும் இருக்கேன் என்பது சந்தோஷமான விஷயம்.

 கிரிக்கெட் பார்த்தோம்

கிரிக்கெட் பார்த்தோம்

இந்த படத்தோட ஷூட்டிங் நடந்த போது தான் கிரிக்கெட் உலகப் கோப்பை போட்டியும் நடந்தது. நடிக்கிறதை விட்டுவிட்டு எல்லோரும் மேட்ச் பார்க்க வந்துடுவோம்,. சிவா அண்ணனும் சரியாக கிரிக்கெட் வெறியர் என்பதால அவரும் மேட்ச் பார்க்க ஆரம்பித்துவிடுவார். தயவு செய்து கிரிக்கெட்டை எல்லாம் ஆஃப் செய்துவிட்டு வாங்கன்னு பாண்டியராஜ் கத்திக்கிட்டே இருப்பார்.

சிவா உண்மையில் சூப்பர்

சிவா உண்மையில் சூப்பர்

சிவா ரொம்ப ஜாலியான டைப். பெரிய நடிகர் என்பதற்கான எந்த கெத்தும் இருக்காது. எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். சூரியும் அவரும் சேர்ந்து ஏதாவது கலாட்டா செஞ்சுக்கிட்டே இருப்பாங்க. சில சமயம் பாண்டிராஜ் சாரும் அவங்கக்கூட சேர்ந்துகிட்ட எல்லோரையும் கலாய்ப்பாங்க. படப்பிடிப்பு எப்படி போனது என்றே தெரியல

குடும்பப் படம்

குடும்பப் படம்

நம்ம வீட்டு பிள்ளை படம் முழுக்க முழுக்க ஒரு பேமிலி சப்ஜெக்ட். படப்பிடிப்பு தளமே ஏதோ கூட்டு குடும்பம் போல ஜாலியா தான் இருக்கும். அதேபோல தான் படமும் செம ஜாலியாக வந்திருக்கு. எல்லோருக்கும் பிடித்தமான ஒரு பக்கா கமர்சியல் படமாக, குடும்பங்கள் கொண்டாடக்கூடியப் படமாக நம்ம வீட்டு பிள்ளை இருக்கும்", என்கிறார் ரெஜித்.

அலேகா வில்லன்

அலேகா வில்லன்

ரெஜித் மேனன் தற்போது அலேகா எனும் படத்தில் வில்லான நடித்துள்ளார். இந்த படத்தில் ஆரி ஹீரோவாகவும், ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். அலேகா படத்தின் போஸ்டர் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடதக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X