சிவகார்த்திக்கேயன் – ஹன்சிகா ஜோடி சேரும் மான் காரத்தே
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கதை,திரைக்கதை எழுத அவரது உதவியாளர் திருக்குமரன் இயக்கும் மான் கராத்தே படத்தில் சிவகார்த்திக்கேயன் உடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஹன்சிகா.
விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, என பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்த ஹன்சிகா முதன் முறையாக வளர்ந்து வரும் இளம் ஹீரோ சிவகார்த்திக்கேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
'எதிர் நீச்சல்' படத்தின் வெற்றிக்குப் பின்னர் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த போதும் ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை என்றவுடன் உடனே ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

பிரம்மாண்ட தயாரிப்பு
ஏ.ஆர். முருகதாஸ், கதை, திரைக்கதை எழுதுவதோடு படத்தை தயாரிக்கிறார். அவருடன் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன் இணைந்து பிரம்மாண்ட படைப்பாக தயாராக உள்ளது மான் கராத்தே. திருக்குமரன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். அட்டகாசமான 5 பாடல்களைத் தரப்போகிறாராம்.

ஜூலை 10ல் பூஜை
ஜூலை 10ம் தேதி படத்திற்கான சிறப்பு பூஜை போடப்படுகிறது. சிவகார்த்திக்கேயன் தன்னுடைய தற்போதைய வேலைகளை முடித்துக் கொண்டு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் மான்கராத்தே குழுவினருடன் இணைந்து கொள்கிறார்.

சிவகார்த்திக்கேயன் – முருகதாஸ் கூட்டணி
சென்னை, பெங்களூ, அதிரப்பள்ளி போன்ற இடங்களிலும், வெளிநாடுகளில் பாடல்களைப் படமாக்கவும் திட்டமிட்டுள்ளனராம்.
சிவகார்த்திகேயன் - ஹன்சிகா முதன் முறையாக ஜோடி சேருவதோடு ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை தயாரிப்பு என்பதால் கோலிவுட்டில் பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











