»   »  சிவகார்த்திகேயனும் 160 மில்லியன் டாலரும்...

சிவகார்த்திகேயனும் 160 மில்லியன் டாலரும்...

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil
Siva Karthikeyan’s $160 million gone like that
வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திக்கேயனை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், மிமிக்ரி கலைஞராகவும்தான் இன்றைக்குத் தெரியும். ஆனால் அவர் ஒரு எஞ்ஜீனியர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

படிக்கும் போது அவர் செய்த புராஜெக்ட் ஒன்று இப்போது 160 மில்லியன் டாலர்கள் சம்பாதித்து கொடுத்துள்ளது. ஆனால் அது சிவகார்த்திக்கேயனுக்கு அல்ல. மற்றொருவர் அந்த புகழையும் பணத்தையும் தட்டிச் சென்று விட்டாரம்.

சிவகார்த்திகேயன் குழுவினர் கல்லூரியின் இறுதி ஆண்டில் ஒரு 'Face Recognition software'-ஐ புராஜெக்டாக எடுத்து செய்திருக்கின்றனர். புராஜெக்டை நல்ல முறையில் முடித்து 200-க்கு 198 மதிப்பெண்களும் பெற்றிருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் குழு செய்த புராஜெக்டை பரிசோதனை செய்த தேர்வு கண்காணிப்பாளர், இவர்களின் நல்ல முயற்சியை பாராட்டியதோடு தனது மாணவர்களுக்கும் இது உதவியாக இருக்கும் என்று சொல்லி அதன் நகல் ஒன்றை எடுத்துச் சென்றாராம்.

சிவகார்த்திகேயன் கொடுத்த புராஜெக்டை லேசாக மாற்றியமைத்த அந்த பேராசிரியர், அதனை தனது புராஜெக்ட் எனக்கூறி டாக்டரேட் பட்டம் பெற்றறிருக்கிறார் .

தற்போது அந்த 'Face Recognition software'-ஐ வாங்க பல நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு விலை பேசுகின்றனராம். 160 மில்லியன் டாலர் விலைபோகும் அந்த சாஃப்ட்வேரைப் பற்றி கவலைப்படாத சிவகார்த்திகேயன் தொடர்ந்து திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்திவருகிறாராம். அவரது முயற்சியில் வெற்றி பெற்று தற்போது இரண்டு கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் சிவ கார்த்திக்கேயன்.

இதைப் பற்றி கேட்டால், இதெல்லாம் சாதரணம் பாஸ் என்பது போல சிரிக்கிறார் ஜீனியஸ் சிவகார்த்திக்கேயன்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    We all know how Siva Karthikeyan made it to films. But there’s another side to him. He is also an engineer. Siva scored 198 on 200 for his project and the external examiner took a copy of the program with him saying it was for his students. Now, it is said that the program’s worth is around $160 Millions and there are buyers lined up to take it with them.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more