சிவ கார்த்திகேயனின் டாக்டர் படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? கசிந்த தகவல்.. குஷியில் ரசிகர்கள்!
சென்னை: சிவ கார்த்திகேயனின் டாக்டர் படம் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவ கார்த்திகேயன். இவர் தனது தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சிவ கார்த்திகேயன்.

கோவாவில் படம்
இந்நிலையில் டாக்டர் படம் ரிலீஸ் குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது. இந்தப் படம் கோவாவில் படமாக்கப்பட்ட போது லாக்டவுன் நடைமுறை படுத்தப்பட்டதால் ஷுட்டிங் நிறுத்தப்பட்டது. இந்த லாக்டவுன் நேரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட போர்ஷனுக்கான எடிட்டிங் பணியை மேற்கொண்டார்.

இன்னும் 2 வாரங்கள்
மேலும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள செல்லம்மா மற்றும் நெஞ்சமே என்ற இரண்டு பாடல்களை படக்குழு இதுவரை வெளியிட்டுள்ளது. அந்த பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் டாக்டர் படத்தின் ஷுட்டிங் முடிய இன்னும் 2 வாரங்கள் தேவைப்படுவதாக தெரிகிறது.

முதல் படம் இதுதான்
அக்டோபர் மாதத்திற்குள் படத்தின் பணிகள் நிறைவடைந்து விட்டால் வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனால் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் சிவ கார்த்திகேயனின் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும்.
Recommended Video

தியேட்டர் உரிமையாளர்கள்
மேலும் இது ரசிகர்களை மீண்டும் தியேட்டர் பக்கம் இழுக்க ஒரு பெரிய வாய்ப்பாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே அக்டோபர் முதல் தியேட்டர்களை திறக்க அனுமதிக்குமாறு திரையரங்க உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











