ரஜினி பட வசனத்தை டைட்டிலாக வைத்த சிவகார்த்திகேயன்...குஷியான ரசிகர்கள்

சென்னை : பிரபலமான சினிமா பாடல் வரிகள், கேரக்டர்கள், பழைய சினிமா படங்களின் பெயர்களை புதிய சினிமாக்களுக்கு டைட்டிலாக வைப்பது தமிழ் சினிமாவில் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகர்கள் பேசிய பஞ்ச் டையலாக்குகளை டைட்டிலாக வைக்கும் முறை தொடங்கி வருகிறது.

அந்த வகையில், தனது புதிய படத்திற்கு 'சிங்க பாதை' என டைட்டில் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவாஜி படத்தில் ரஜினி பேசிய வசனமான 'சிங்க பாதை' என்பதை சிவகார்த்திகேயன் டைட்டிலாக வைத்துள்ளதை ரஜினி மற்றும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிஸியான சிவகார்த்திகேயன்

பிஸியான சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது 'அயலான்', 'டாக்டர்', 'டான்' என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். புதுமுக இயக்குனரான சிபி சக்ரவர்த்தி இயக்கும் 'டான்' படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

ரம்ஜானுக்கு வரும் டாக்டர்

ரம்ஜானுக்கு வரும் டாக்டர்

டாக்டர் படத்தை சிவகார்த்திகேயன் ஏற்கனவே நடித்து முடித்து விட்டார். ஏப்ரலில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் பல்வேறு காரணங்களால் தள்ளி போடப்பட்டுள்ளது. ரம்ஜானுக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் சிங்க பாதை

சிவகார்த்திகேயனின் சிங்க பாதை

'டான்' படத்தை தொடர்ந்து, கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தை டைரக்டர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அசோக் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தான் 'சிங்க பாதை' என பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

NEXT SJ சூர்யா கூட நடிக்கிறேன் | YASHIKA AANNAND PRESSMEET | FILMIBEAT TAMIL
போட்டி களத்தில் வடிவேலு

போட்டி களத்தில் வடிவேலு

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு நாய் சேகர் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மாநகரம் படத்தில் வடிவேலு நடித்த கேரக்டரின் பெயரையே, அவர் படத்திற்கு டைட்டிலாக வைக்க உள்ளதாக கூறப்பட்டது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் பட டைட்டிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X