மீண்டும் இணையும் சிவா மனசுல சக்தி கூட்டணி.. ரசிகர்கள் ஹேப்பி!

சென்னை : தமிழில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற கலப்பான காமெடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் எம். ராஜேஷ்.

பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றியை பெற ராஜேஷின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் மளமளவென உயர்ந்து.

இந்த நிலையில் தனது முதல் படத்தின் கூட்டணியுடன் இயக்குனர் ராஜேஷ் மீண்டும் சேர உள்ளதால் ரசிகர்கள் செம ஹேப்பியாக உள்ளனர்.

ஓன் ஃபார்முலாவில்

ஓன் ஃபார்முலாவில்

கலகலப்பான காமெடி திரைப்படங்களுக்கு சினிமா பிரியர்கள் இடையே எப்பொழுதும் வரவேற்பு இருந்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்கவைக்கும் காமெடி திரைப்படங்கள் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வெளியாகிக் கொண்டு வருகிறது. ஒரு சில இயக்குனர்கள் தங்களது ஓன் ஃபார்முலாவில் திரைப்படங்களை இயக்கிய இன்று வரை வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர்.

காமெடிக்காகவே பல நாட்கள்

காமெடிக்காகவே பல நாட்கள்

அவ்வகையில் தமிழ் சினிமாவிற்கு சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே வெற்றி இயக்குனர் என பெயரைப் பெற்றவர். ஜீவா, சந்தானம், ஊர்வசி, ஞானசம்பந்தம் ஆகியோர் நடிப்பில் உருவான சிவா மனசுல சக்தி திரைப்படம் காமெடிக்காகவே பல நாட்கள் திரையில் ஓடி வசூலை அள்ளியது.

திருப்புமுனையாக

திருப்புமுனையாக

இதன் பின் ரஜேஷ் இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களும் தொடர்ந்து வெற்றி பெற ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த எம் ராஜேஷ் ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக வலம்வர சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திலும் இவர் தான் வசனம் எழுதியிருப்பார்.

அடுத்த படம்

அடுத்த படம்

இவ்வாறு தொடர் வெற்றி திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை குதூகலிக்க வைத்து வந்த எம்.ராஜேஷ் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் இருந்து இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் தொடர் தோல்விகளை கண்டுவர அடுத்த படம் கண்டிப்பாக வெற்றித் திரைப்படமாக அமையவேண்டும் என தீவிரமாக உள்ளார்.

ஹீரோவாக

ஹீரோவாக

இந்நிலையில்தான் முந்தைய திரைப்படங்களுக்கு மிகப்பெரிய தூணாக இருந்த சந்தானத்தின் காமெடியை மனதில் வைத்துக்கொண்டு நடிகர் சந்தானத்தை ஹீரோவாக வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவும் முயற்சிக்க சம்பளம் திரைக்கதை என சில சிக்கல்களால் இந்த திரைப்படமும் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் முதல் திரைப்படத்தின் நடிகருடன் இணைகிறார் ராஜேஷ்.

மிகப்பெரிய கம் பேக்

மிகப்பெரிய கம் பேக்

முதல் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ஜீவாவுடன் மீண்டும் கை கோர்க்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ஜீவாவுக்கும் சமீபகாலமாக தொடர் தோல்வி திரைப்படங்களாக அமைந்து வரும் நிலையில் இருவருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய கம் பேக்காக இருக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து உள்ள நிலையில் இது ஒருவேளை சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் பாகம் இரண்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் ஜீவாவின் நடிப்பில் இப்பொழுது களத்தில் சந்திப்போம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X