தினமும் மாலையில் சிவன் - சக்தி தரிசனம்; பக்தர்களுக்கு கலர்ஸ் தமிழ் சீரியல் ட்ரீட்!

By Mohan Raj

சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் குடும்ப நெடுந்தொடர்களுக்கு எப்படி ஒரு நல்ல வரவேற்பு எப்போதும் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றதோ, அதேபோல், கடவுள் தொடர்பான, புராணங்கள் தொடர்பான நெடுந்தொடர்களுக்கும் மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்துள்ளது மட்டும் இல்லாமல், டி.ஆர்.பி-யை எகிற வைத்துள்ளனர். இதனால்தான் ராமாயணம், மகாபாரதம், திருவிளையாடல் ஆகியவையும், அம்மன் தொடர்பான நெடுந்தொடர்களும், நாக தெய்வங்கள் தொடர்பான நெடுந்தொடர்களும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. தமிழில் நேரடியாக உருவாக்கப்பட்டது மட்டும் இல்லாமல், மற்ற மொழிகளில் இருந்தும் தமிழில் டப் செய்து ஒளிபரப்பப்பட்டு மெகா ஹிட் அடித்த தொடர்களும் ஏராளம்.

சிவ சக்தி திருவிளையாடல் தொடர்: இதற்கு முன்னர் வெளியான புராணம் தொடர்பான நெடுந்தொடர்கள் வாரத்தில் ஒரு மணி நேரமோ, அல்லது வார இறுதி நாட்களில் இரண்டு மணி நேரங்களோதான் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், சிவ சக்தி திருவிளையாடல் தொடர் வார நாட்களில் அதுவும் ப்ரைம் நேரம் எனப்படும் மாலை 7 மணிக்கு ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம் அதாவது ஜூன் 3ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் சிவ சக்தி திருவிளையாடல் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Siva Sakthi Thiruvilayadal Siva Sakthi Colors Tamil

சக்தியின் பார்வையில் சிவன்: இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, சிவ சக்தி திருவிளையாடல் தொடர், சிவன் மற்றும் சக்தியின் பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் காதல், கடமை, தியாகம் மற்றும் முக்கியமாக ஒருவரையொருவர் மாற்றுவதற்கான அவர்களின் முயற்சிகள் மற்றும் கொண்டாட்டங்களின் வியத்தகு பயணம்.

Siva Sakthi Thiruvilayadal Siva Sakthi Colors Tamil

சிறந்த கணவன் என்று சொல்லும்போது சிவனையே நினைவுபடுத்துவது ஏன் என்ற கேள்விகளுக்கு இந்தத் தொடர் விடையளிக்கும். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சிவ சக்தி திருவிளையாடல் ஆன்மீக தொடர், பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Siva Sakthi Thiruvilayadal Siva Sakthi Colors Tamil

கேள்விக்கு என்ன பதில்: இது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது இடையிடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் அவர்களுக்கு பரிசுகளையும் கலர்ஸ் தமிழ் கொடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நாரதருக்கும் பிரம்மனுக்கும் என்ன உறவு? பிரம்மனின் எத்தனையாவது தலையை சிவன் கொய்தார் போன்ற புராணம் தொடர்பான கேள்விகளே இடம் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X