சுமோவில் மிரட்டும் மிர்ச்சி சிவா.... பட்டய கௌப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
சென்னை: அகில உலக சூப்பர் ஸ்டாரான நம்ம மிர்ச்சி சிவா நடிக்கிற சுமோ படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டைரக்டர் வெங்கட் பிரபு வெளியிட்டு வாழ்த்தும் தெரிவிச்சிருக்கார். சென்ட்டிமெண்ட்டோட காமெடியும் கலந்து கட்டி ரெடியாகுற இந்த படத்துக்கு முக்கியமா நம்ம சிவாவே ஸ்க்ரீன்ப்ளேயோட டயலாக்கையும் எழுதியிருக்கார்.
தமிழ்ப்படம் 2 படத்தை அடுத்து அகில உலக சூப்பர் ஸ்டாரான மிர்ச்சி சிவா வெங்கட் பிரபு டைரக்ட் பண்ணின பார்ட்டி படத்துல நடிச்சிருந்தார். அதுக்கப்புறமா சிவா நடிக்கிற படம் இப்ப தயாராகிட்டு இருக்கு. பிப்ரவரி 14 படத்த டைரக்ட் பண்ணின எஸ்.பி.ஹோசிமின் தான் சுமோ படத்தையும் டைரக்ட் பண்றார்.

இந்த படத்தில மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியா பிரியா ஆனந்த் நடிக்கிறார். கூடவே சுமோ மல்யுத்த வீரர்களான யோசினோரி தாஷிரோவும் (Yoshinori Tashiro) நடிக்கிறார். காமெடியோட சென்ட்டிமெண்டும் சேர்ந்து தயாராகுர இந்தப்படத்துல, இன்னோரு ஸ்பெஷல் என்ன நம்ம மிர்ச்சி சிவாவே ஸ்க்ரீன்ப்ளே, டயலாக் ரெண்டையும் சேத்து ஒரு வெறியோட எழுதியிருக்குறதா சொல்றாங்க.
இந்தப் படத்தோட முக்கிய கான்செப்ட்டே ஜப்பான்ல இருக்குற சுமோ மல்யுத்த வீரர்களோட வாழ்க்கைய மையமா வச்சித்தான் இந்தப் படமே ரெடியாயிட்டு இருக்கு. அதனால மிர்ச்சி சிவாவும் சுமோ மல்யுத்த விளையாட்ட ரொம்ப சின்சியரா கத்துக்கிட்டு இருக்கிறதா தகவல் வெளியாகிட்டு இருக்கு.
கேமரா மேன் யாருன்னா, மின்சாரக் கனவு படத்த டைரக்ட் பண்ணின ராஜீவ் மேனன் தான். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் கம்பெனி தான் இந்தப்படத்தை தயாரிக்குது.
நிலைமை இப்டி இருக்குறப்ப, சுமோ படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னிக்கு வெளி வந்திருக்கு. போஸ்ட்டர வெளியிட்ட டைரக்டர் வெங்கட் பிரபு, கையோட படக்குழுவுக்கும் நம்ம அகில உலக சூப்பர் ஸ்டாரான மிர்ச்சி சிவாவுக்கும் படம் வெளிவந்து ஜெயிச்சு வெள்ளி விழா கொண்டாட வாழ்த்து தெரிவிச்சிருக்கார்ன பாத்துக்கோங்க.
பதிலுக்கு நம்ம மிர்ச்சி சிவாவும் தன்னோட ட்விட்டர் பக்கத்துல டைரக்டர் வெங்கட் பிரபுவுக்கு நன்றிய தெரிவிச்சிருக்கார். சிவா வெற்றிப் படத்த கொடுத்து ரொம்ப வருஷமாச்சு. அதனால சுமோ படம் வெற்றியடைய நம்மளும் வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications