அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39
Recommended Video
சென்னை: சூர்யா 39 படத்தை சிவா இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சூர்யா 39 படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ட்வீட் செய்தது. இந்நிலையில் அறிவித்தபடி படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது சூர்யா 39 படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். சிவா, சூர்யா இணையும் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்த ட்வீட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் அறிவிப்பை பார்த்த தல ரசிகர்கள் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சூர்யா 38 படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருகிறார் சுதா. கார்த்திக்கு ஒரு சிறுத்தை கொடுத்தது போன்று அண்ணன் சூர்யாவுக்கு ஒரு மாஸ் படத்தை கொடுக்குமாறு ரசிகர்கள் சிவாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தல 60 படத்தை சிவா இயக்குவார் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் சூர்யாவை வைத்து படம் பண்ணுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











